எனக்கு வேற வழி தெரியல ஆத்தா.. துணை முதல்வர் படத்துக்கு எகிறிய டிக்கெட் விலை.. பறக்கும் ட்ரோல்கள்!

ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மற்ற முன்னணி நடிகர்கள் படங்கள் வரும் போதெல்லாம் டிக்கெட் விலை உயர்த்தக் கூடாது என ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகி வரும். கர்நாடகாவில் அதிகபட்சமாக 200 ரூபாய் தான் புதிய படங்களுக்கு டிக்கெட் நிர்ணயம் செய்ய வேண்டும் என சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு படத்துக்கு டிக்கெட் விலை உயர்ந்திருப்பது ஏகப்பட்ட கேள்விகளையும் ட்ரோல்களையும் எழுப்பி உள்ளது.

கோவிந்தா பாடலை சந்தானம் படத்தில் பயன்படுத்தக் கூடாது என பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி வழக்கு தொடர்ந்தது. மேலும், 100 கோடி வரை அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பிரச்சனை செய்தனர். கடைசியில், அந்த படத்தில் இருந்து பாடலே நீக்கப்பட்டது.

Pawan Kalyan s Hari Hara Veera Mallu ticket price hiked for its Premiere show
Photo Credit:

இந்நிலையில், பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு படத்தின் டைட்டிலில் ஹரி ஹர என சிவன் மற்றும் விஷ்ணுவின் பெயர்களை வைத்துக் கொண்டு நிதி அகர்வால், நோரா ஃபதேகி என கவர்ச்சியாட்டம் போட்டுருக்கீங்களே இதுமட்டும் நியாயமா பாஸ் என பவன் கல்யாணை ஒரு பக்கம் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வர, இன்னொரு பக்கம் டிக்கெட் விலையை இந்தளவுக்கு உயர்த்தலாமா? என்கிற ட்ரோல்களும் கிளம்பியுள்ளன.

600 ரூபாய் டிக்கெட் விலை: க்ரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால், நோரா ஃபதேகி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் இந்த வாரம் ஜூலை 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பவன் கல்யாணின் ஹரிஹர வீர மல்லு' படத்தின் ரிலீஸையொட்டி, டிக்கெட் விலையை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தெலங்கானா அரசு. வரும் ஜூலை 23ம் தேதி இரவு 9 மணிக்கு திரையிடப்படும் சிறப்பு காட்சிக்கு அதிகபட்சமாக 600 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவை தொடர்ந்து தெலங்கானாவிலும் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

குவியும் ட்ரோல்கள்: 300 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், 600 கோடிக்கும் மேல் வசூல் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதால், எனக்கு வேற வழி தெரியல ஆத்தா என பவன் கல்யாண் டிக்கெட் விலையை அதிகரித்து விட்டார் என்றும் மக்களுக்காக அரசியல் செய்யும் ஒரு துணை முதல்வர் படத்துக்கே இப்படி விலை உயர்வு இருந்தால் எப்படி என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

டிக்கெட் புக்கிங் ஓபன்: நாளை இரவு முதலே பவன் கல்யாண் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான டிக்கெட் புக்கிங்கும் தொடங்கப்பட்டு ரசிகர்கள் டிக்கெட்டுகளை புக் செய்ய ஆன்லைனில் அலைமோதி வருகின்றனர். அவுரங்கசிப் கதாபாத்திரத்தில் பாபி தியோல் நடித்துள்ளார். முகலாய அரசை எதிர்த்த முதல் வீரன் ஹரிஹர வீர மல்லு என இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். துணை முதல்வராக மாறிய பின்னர், பவன் கல்யாண் நடித்துள்ள படம் என்பதால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரசிகர்கள் இந்த படத்தை வேறலெவலில் கொண்டாடவுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X