உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட வருமான வரிகட்டுங்கள்- கமல்
சென்னை: கோயில் உண்டியல்களில் பணத்தைப் போடுவதைவிட, நியாயமாக வருமான வரி செலுத்துங்கள், அதிக பலன் கிடைக்கும் என்றார் கமல் ஹாஸன்.
வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், இரண்டு நாள் தேசிய கலை விழா, சென்னையில் நேற்று தொடங்கியது.
நேற்று, முதல் நாள் விழாவை தமிழக - புதுச்சேரி மாநில வருமான வரித் துறை முதன்மை கமிஷனர், ரவி தலைமை தாங்கினர். இயக்குனர் ஜெனரல் ஜெய்சங்கர், முதன்மை கமிஷனர்கள் பிரதீப் ஆர் சேத்தி, மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர் கமல்
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் நடிகர் கமல் ஹாஸன். தொடர்ந்து நேர்மையாக வரி செலுத்துபவர் என்ற பாராட்டை வருமான வரித்துறையிடமிருந்து பெற்று வருபவர்கள் ரஜினியும் கமலும் என்பதால், கமலை இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர்.

உண்டியலில் போடுவதை விட..
நடிகர் கமல்ஹாசன் பேசியபோது, "கடவுளுக்கு, உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட, வருமான வரி செலுத்தினால், நாட்டு மக்களுக்கு உடனடியாக பயன் கிடைக்கும். நான் நேர்மையாக வரி செலுத்தி வருகிறேன்.

கட்டபொம்மன் போல...
சிலர், வரிகட்டும் போதும் மட்டும், வீரபாண்டிய கட்டபொம்மன் போல, பேச முயல்கின்றனர். அதற்கு முன் சில விஷயங்களை யோசிக்க வேண்டும்.

பலன் அதிகம்
வரியினால், நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களால், பொதுமக்களுக்கு கிடைக்கும் நன்மைகளை நினைத்து பார்த்தால், வரியின் முக்கியத்துவமும், நாட்டு நலத் திட்டங்களுக்கு உதவியதில், வரி செலுத்து வோரின் பங்கும் தெரியும் வரும்,'' என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











