Peddi: ராம நவமியும் ராம் சரண் பிறந்தநாளும்.. பெத்தி படத்தின் அட்டகாசமான க்ளிம்ஸ்.. குஸ்தி வீரன் வராரு!
சென்னை: மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் நடித்துள்ள பெத்தி படத்தின் அட்டகாசமான க்ளிம்ஸ் வீடியோ ராம் சரண் பிறந்தநாள் மற்றும் ராம நவமி பண்டிகையை முன்னிட்டு தற்போது வெளியாகி உள்ளது. குஸ்தி வீரனாக ராம் சரண் பக்கா மாஸ் காட்டுகிறார்.
பெத்தி திரைப்படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதம் இல்லை என்றும் தள்ளிப்போகிறது என்றும் கூறப்பட்ட நிலையில், ஏப்ரல் 30ம் தேதி படம் ஷார்ப்பாக வெளியாகும் என படக்குழு மீண்டும் உறுதி செய்துள்ளது.

புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஜோடியாக நடித்துள்ளார்.
ராம நவமி: ராஜமெளலியின் வாரணாசி திரைப்படம் அடுத்த ஆண்டு ராமநவமிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்து விட்டனர். மேலும், ரன்பீர் கபூரின் ராமாயணம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ஸ் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராம நவமியும் ராம் சரண் பிறந்தநாளும் ஒன்றாக வரும் நிலையில், அந்த படக்குழு சும்மா இருக்குமா ராமநவமியை கொண்டாட இப்படியொரு அட்டகாசமான வேலைப்பாடை இறக்கியுள்ளனர்.
3 குழந்தைகள்: நடிகர் ராம் சரணுக்கு ஆர்ஆர்ஆர் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு ஷங்கரை நம்பி அவர் நடித்த கேம் சேஞ்சர் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்த நிலையில், சமீபத்தில் உபாசனா இன்னொரு ட்வின்ஸ் சர்ப்ரைஸ் கொடுக்க 3 குழந்தைகளுக்கு அப்பாவான சந்தோஷத்தில் ராம் சரண் பெத்தி படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுக்கும் என்கிற நம்பிக்கையுடன் கடுமையாக உழைத்து வருகிறார்.
குஸ்தி வீரனாக அசத்தல்: ஆர்ஆர்ஆர் படத்திலேயே ராம்சரணின் கட்டுமஸ்த்தான சிக்ஸ் பேக் உடம்பு ரசிகர்களை மிரள வைத்தது. இந்நிலையில், பெத்தி படத்தில் குஸ்தி வீரனாக களமிறங்குகிறார். அதிலும், கையில் கதாயுதத்தை வைத்திருக்கும் நிலையில், பார்க்க அப்படியே அனுமான் போல இருக்கிறார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வரும் ஏப்ரல் 30ம் தேதி டோலிவுட்டில் ஒரு அதிரடியான பிளாக்பஸ்டர் வெளியாக காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











