2.0 படத்திற்கு இலவச விளம்பரத்தை எதிர்பார்க்கும் ரஜினி: யாரிடம் இருந்து தெரியுமா?
Recommended Video

ஹைதராபாத்: 2.0 படத்திற்கு நிச்சயம் இலவச விளம்பரம் கிடைக்கும் என்று நம்புகிறார் ரஜினிகாந்த்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் நாளை ரிலீஸாக உள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ரஜினி ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் படம் குறித்து ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது,

2.0
எந்திரன் படத்தை 3டியில் மாற்ற முயன்றும் முடியவில்லை. ஆனால் 2.0 படம் 3டியில் வெளியாகிறது. 2.0 படக் கதையை ஷங்கர் என்னிடம் கூறியதும் இதை படமாக்க முடியுமா என்ற சந்தேகம் வரவில்லை. ஷங்கரால் நிச்சயம் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. கதை மற்றும் பிரமாண்டத்திற்காக பாகுபலி படம் உலக அளவில் பேசப்பட்டது. அதே போன்று 2.0 புதிய தொழில்நுட்பத்தில் பேசப்படும் படமாக இருக்கும்.

விளம்பரம்
2.0 படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். இந்த படத்தை நான் பார்த்துவிட்டு மக்களே இதை நிச்சயம் விளம்பரம் செய்வார்கள் என்று கூறினேன். அந்த அளவுக்கு படத்தில் நிறைய விஷயம் உள்ளது. 1975ம் ஆண்டு என் முதல் படமான அபூர்வராகங்கள் ரிலீஸானபோது அதை பார்க்க இருந்த அதே ஆர்வம் 43 ஆண்டுகளுக்கு பிறகு 2.0 படத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அதிசயம்
படத்தில் பிரமாண்டமான காட்சிகள் உள்ளது. 45 சதவீதம் விஷுவல் எஃபெக்ட் உள்ளது. ட்ரெய்லர், பாடல்கள் எல்லாம் வெறும் சாம்பிள் தான். படத்தை பார்த்து ரசிகர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள். சினிமா துறைக்கே பெருமை சேர்க்கும் படமாக 2.0 இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்கிறார் ரஜினி.

4டி
3டி படம், 4டி சவுண்டு என்று தியேட்டர்களுக்கு செல்லும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை 2.0 படம் அளிக்கிறது. அதனால் படத்தை தியேட்டரில் பார்த்தால் தான் அந்த எஃபெக்ட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











