twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘சிவப்பா’ மாறுனா தான் ஜெயிக்க முடியுமா?... ஷாரூக் விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு

    |

    மும்பை: நடிகர்கள் விளம்பரத்தில் வந்தாலே, அந்தப் பொருளுக்கான மதிப்பு கூடி விடுவது என்னவோ உண்மை தான். ஆனால், அந்தப் பொருட்களை நிஜத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பயன் படுத்துவார்களா என்பது கேள்விக்குறியே...

    ஆனால், நா இந்த சோப் போடுறேன், இந்த் கிரீம் பூசறேன், இந்த ஷாம்பூ போட்டு குளிக்கறேன்' என நடிகரோ நடிகையோ விளம்பரத்தில் தோன்ரி கூறும்போது தன்னிச்சையாக நமக்கும் அந்தப் பொருட்களை உபயோகிப்பதன் மூலம் அவர்களை போன்றே மாறிவிடுவோம் என்ற பிரம்மை உண்டாகிறது.

    தற்போது, அப்படிப்பட்ட விளம்ப்ரம் ஒன்ரில் நடித்து தான் வம்பில் மாட்டியுள்ளார் ஹிந்தி நடிகர் ஷாரூக்.

    பேர்னஸ் விளம்பரம்....

    பேர்னஸ் விளம்பரம்....

    சமீப காலமாக, ஒரு குறிப்பிட்ட கம்பெனியின் கிகப்பழகு க்ரீமுக்கான விளம்பரத்தில் தோன்றி வருகிறார் ஷாரூக். அதில் தன்னைப் பற்றி தானே விளக்குவார்.

    ராஜ வாழ்க்கைக்கு காரணம் சிகப்பழகா...

    ராஜ வாழ்க்கைக்கு காரணம் சிகப்பழகா...

    தான் மிகவும் ஒதுக்கப் பட்ட நிலையில் இருந்ததாகவும், இந்த கிரீமை போட்டவுடன் சிகப்பாக மாறியதாகவும், அதன் மூலம் தனக்கு ராஜ வாழ்க்கை கிட்டியதாகவும் அந்த விளம்பரத்தில் தெரிவிப்பார் ஷாரூக்.

    கறுப்பே அழகு....

    கறுப்பே அழகு....

    தற்போது அந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன் லைனில் மனு செய்துள்ளனர் ஷாரூக்கிற்கு எதிராக. ‘கறுப்பே அழகு' என்ற இயக்கத்தின் கீழ் அளிக்கப் பட்டுள்ள இந்த மனுவிற்கு ஆதரவாக கிட்டத்தட்ட பத்தாயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தவறான வழிகாட்டுதல்...

    தவறான வழிகாட்டுதல்...

    சிவப்பாய் இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்பதான மனப்போக்கை இந்த விளம்பரம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவர் மனதிலும் திணிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் இவர்கள்.

    இவங்களுக்கும் பங்கிருக்கு....

    இவங்களுக்கும் பங்கிருக்கு....

    மனுவில் இந்த விளம்பரத்தைத் தயாரித்த ராஜ் குமார் ஹிரானி, சந்தா சவேரி, சகுன் பத்ரா மற்றும் மிலிந்த் நபார் ஆகியோரது பேரும் சேர்க்கப் பட்டுள்ளது.

    English summary
    An online petition has been filed against Shahrukh Khan for endorsing a fairness cream brand, Fair and Hansome. The petition is filed on website change.org with the campaign 'Dark Is Beautiful' that has reached to 10,000 supporters signing the petition.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X