#Petta ரஜினியை எதிர்த்தாதான் பெரிய ஆள் ஆக முடியும்.. கரகோஷம் அள்ளிய விஜய்சேதுபதி!
பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்து இருக்கும் விஜய் சேதுபதி, வில்லனாக அந்த படத்தில் நடத்தி இருக்கிறார்.
Recommended Video

சென்னை: பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்து இருக்கும் விஜய் சேதுபதி, வில்லனாக அந்த படத்தில் நடத்தி இருக்கிறார்.
தற்போது பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது.

விஜய் சேதுபதி கரகோஷம்
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு பெரிய அளவில் கரகோஷம் கிடைத்தது. ரஜினியே எதிர்பார்க்காத வகையில் விஜய் சேதுபதிக்கு கரகோஷம் எழுந்தது.

வில்லன்தான்
இதில் பேசிய விஜய் சேதுபதி, தான்தான் படத்தில் வில்லன் என்று உண்மையை கூறியுள்ளார். படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் ஜித்து என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் வில்லன் என்ற விவரமும் வெளியாகி உள்ளது.

தான்தான் பெரிய ஆள்
மேலும், அதில் பேசிய விஜய் சேதுபதி, பெரிய ஆளை எதிர்த்தால்தான் பெரிய ஆள் ஆக முடியும். படத்தில் ரஜினியை நான்தான் எதிர்த்து இருக்கிறேன். அதனால் நான்தான் வில்லன் என்று கூறியுள்ளார்.

கடவுள் என்ன செய்வார்
அதேபோல் கடவுளே ரஜினியின் நடிப்பை பார்த்து ஆச்சர்யப்படுவார். அந்த அளவிற்கு ரஜினியின் நடிப்பு சிறப்பானது. அவருடன் நடித்தது சந்தோசம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











