அத்தையுடன் தியேட்டரில் #Petta பார்த்த தனுஷ்: மாமா தரமான சம்பவம் செஞ்சிட்டாராம்
Recommended Video

சென்னை: தனுஷ் பேட்ட படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் இன்று ரிலீஸாகியுள்ளது. ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில் தனுஷ் தனது தலைவர் படத்தை தியேட்டரில் பார்த்துள்ளார்.
தியேட்டர்
தனுஷ் தனது அத்தை லதா ரஜினிகாந்த், த்ரிஷா ஆகியோருடன் சேர்ந்து ரோஹினி தியேட்டரில் பேட்ட படத்தை பார்த்து ரசித்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தனுஷ்
பேட்ட படம் பற்றி தனுஷ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, #petta ஒரு காவியம்... சூப்பர் ஸ்டார்...லவ் யூ தலைவா... தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். கார்த்திக் சுப்புராஜுக்கு பெரிய நன்றி..அனிருத்... இது தான் உங்களின் சிறந்த பிஜிஎம்... பேட்ட பராக் என்று தெரிவித்துள்ளார்.

மருமகன்
மாமனார், மருமகன் என்பது எல்லாம் இரண்டாவது தான். முதலில் அவர் என் தலைவர், நான் அவரின் தீவிர ரசிகன் என்று தனுஷ் அடிக்கடி பெருமையாக கூறுவார். பேட்ட படம் பார்த்த அவரால் தலைவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. படத்தை எடுத்ததும் ரஜினி ரசிகனாச்சே.
ட்விட்டர்
தனுஷ் பேட்ட படத்தை பார்த்தது மட்டும் அல்ல முன்னதாக அதை ட்விட்டரில் விளம்பரமும் செய்து வந்தார். தனுஷை ட்விட்டரில் 8.09 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











