மகனை ரெடியாக்கும் அஜித்குமார்?.. ஏகே ஒரு முடிவோடுதான் இருக்காரு போல.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்
சென்னை: அஜித்குமார் நடிப்பில் இந்த வருடம் வெளியான விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களுமே பெரிய வரவேற்பை பெறவில்லை. GBU படத்தை மெகா ஹிட் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடத்தான் செய்கிறார்கள். ஆனால் பொதுவான ரசிகர்களுக்கு படம் சுத்தமாக பிடிக்கவில்லை. இதற்கிடையே சமீபத்தில்தான் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் அஜித் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன.
அஜித்குமார் கடைசியாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களின் இயக்குநர்களோடும் ஏகே முதன்முறையாக சேர்ந்ததால்; இரண்டு படங்களின் மீதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் விடாமுயற்சி படுதோல்வியையும், குட் பேட் அக்லி சுமாரான வரவேற்பையுமே பெற்றது அதேசமயம் அஜித் ரசிகர்களுக்கு குட் பேட் அக்லி அவ்வளவு பிடித்திருந்ததாகவும்; படம் முழுக்க மாஸ் சீன்களை அள்ளி வைத்திருக்கிறாரே இயக்குநர் என்றும் அவர்கள் கொண்டாடிவருகிறார்கள். படமும் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறதாம்.
கார் ரேஸில் ஆர்வம்: ஏகே இப்போது சினிமாவைவிடவும் கார் ரேஸ் மீது உச்சக்கட்ட ஆர்வத்தையும், முழு கவனத்தையும் திருப்பியிருக்கிறார். துபாய், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடந்த பந்தயத்தில் தனது ரேஸிங் டீமோடு கலந்துகொண்ட அவர் வெற்றி பெறவும் செய்தார். இதன் காரணமாக அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான். அதேசமயம் ரேஸ் நடக்கும் சமயங்களில் கண்டிப்பாக திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார். எனவே இன்னும் சில வருடங்கள் மட்டும்தான் அவர் சினிமாவில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

பத்ம பூஷன் அஜித்: இதற்கிடையே அஜித்குமாருக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அந்த விருதினை சில நாட்களுக்கு முன்புதான் டெல்லியில் ராஷ்டிரபதி பவனுக்கு சென்று பெற்றுக்கொண்டார் அவர். அவருக்கு அதனையொட்டி பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். விருதினை வாங்கிய பிறகு இத்தனை வருடங்கள் மீடியாவை சந்திக்காத அவர் தனியார் ஆங்கில ஊடகத்துக்கும் பேட்டியை கொடுத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்தியது. விரைவில் தமிழ்நாட்டிலும் ஊடகத்திடம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகனை ரெடியாக்கும் அஜித்?: இந்நிலையில் அவர் தொடர்பான புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன. அதாவது ரேஸ் காரில் அவரது மகன் ஆத்விக் இருக்கிறார். மேலும் அஜித், ஷாலினி, கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயன் உள்ளிட்டோரும் அவருடன் இருக்கிறார்கள். ஸ்டியரிங்கை பிடித்தபடி ரேஸ் காரில் ஆத்விக் செம கெத்தாக அமர்ந்திருக்கிறார். மேலும் நரேனிடம் சில ஐடியாக்களையும் கேட்டுக்கொண்டார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, அட ஏகே தனது மகனை இப்போதே கார் ரேஸுக்கு தயார் செய்கிறாரா? என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள்.
அஜித்தின் பேட்டி: முன்னதாக தனியார் ஊடகத்துக்கு அஜித் அளித்த பேட்டியில், 'நான் தொழில் செய்தபோது கடன் ஏற்பட்டது. அதனை அடைப்பதற்காகத்தான் நான் சினிமாவில் நடிப்பதற்கே வந்தேன். ஆரம்பத்தில் எனது தமிழ் உச்சரிப்பை கிண்டல் செய்தார்கள். பிறகு கற்றுக்கொண்டேன். வாலி, வரலாறு, மங்காத்தா, பில்லா போன்ற படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்தவை. நம்மாலும் இப்படி நடிக்க முடியுமா என்று என்னையே ஆச்சரியப்படுத்திய படங்கள் அவை. ஷாலினி எனக்காக நிறைய தியாகம் செய்திருக்கிறார்" என்றார். அவரது இந்தப் பேட்டியும் பெரிதாக கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











