சில நடிகைகள், ஒரு தொகுப்பாளினியை பார்த்து பாத்ரூமில் ஒளிந்தார் ஜீவா.. சுசித்ரா ஓபன் டாக்

சென்னை: பாடகி சுசித்ரா தனது பேட்டிகளில் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ், திரிஷா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பெரும் பரபரப்பை கிளப்பினார். அவரது பேச்சுக்கு தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் சூசகமாக பதிலடி கொடுத்தார்கள். இந்தச் சூழலில் மீண்டும் சில விஷயங்களை ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் சுசித்ரா.

வானொலியில் ஆர்ஜே, பத்திரிகையாளர், பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. முக்கியமாக பின்னணி பாடகியாக வெகு பிரபலமானவர் சுசித்ரா. மங்காத்தாவில் இடம்பெற்ற வாடா பின்லேடா, வேட்டைக்காரனில் இடம்பெற்ற சின்னத்தாமரை உள்ளிட்ட பல பாடல்களை பாடிய சுசித்ரா கடந்த 2016ஆம் ஆண்டு தலைப்பு செய்தியாக மாறினார். அவரது ட்விட்டர் அக்கவுண்ட்டிலிருந்து சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகின. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

suchitra jeeva nivin pauly

விவாகரத்து: அவர் கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். சுச்சி லீக்ஸ் சமயத்தில் சுசித்ராவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும்; அதனால்தான் அவர் அப்படி நடந்துகொண்டார் என்றும் கார்த்திக் கூறியிருந்தார். அதற்கு பிறகு சுசித்ராவை காணவில்லை. அதேசமயம் கார்த்திக் குமாரை விவாகரத்து செய்துகொண்டு இப்போது இன்னொருவரை திருமணம் செய்து வாழ்ந்துவருகிறார் சுசித்ரா.

சுசித்ராவின் பேட்டி: கிட்டத்தட்ட 8 வருடங்கள்வரை எங்கிருந்தார் என்று தெரியாத சுசித்ரா இப்போது மீண்டும் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். சில மாதங்களுக்கு முன்பு பிரபல யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் குறித்து பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். மேலும் சுச்சி லீக்ஸ் என்பதே தனுஷ், திரிஷா உள்ளிட்டோர் செய்த பிராங்க்தான். முக்கியமாக அந்தப் புகைப்படங்களை திரிஷாதான் வெளியிட்டார் என்று சொல்லி பகீர் கிளப்பினார் சுசித்ரா.

வழக்கு: இதற்கிடையே சுசித்ரா தன் மீது அவதூறு பரப்புவதாக கூறி அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்துவருகிறது. அதேசமயம் சுசித்ரா தனது பேட்டிகளில் பல விஷயங்களை மீண்டும் பேசிவருகிறார். அந்தவகையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜீவா, நிவின் பாலி குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்ர் சுசித்ரா.

சுசித்ரா பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "நிவின் பாலி ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக சென்னைக்கு வந்தால் அவருக்கு ஃபோன் செய்து பார்ட்டிக்கு அழைப்பார்கள். அங்கு செல்லும் நிவின் பாலி பெண்கள் விஷயத்தில் ஒழுக்கமாக இருப்பார். ஆனால் சில பெண்களோ நிவின் பாலி ஆணே இல்லை என்று சொல்வார்கள். சிலரோ அவர் தன் மீது கைவைத்துவிட்டார் என்று சொல்வார்கள். சினிமாவில் பெண்களுக்கு மட்டும் பிரச்னையில்லை. ஆண்களுக்கும் இருக்கிறது.

நடிகர் ஜீவாவெல்லாம் சில நடிகைகளை பார்த்து பாத்ரூமில் எல்லாம் ஒளிந்திருக்கிறார். அதேபோல் ஒரு தொகுப்பாளினி இருக்கிறார். அவருக்கு பிரபல நடிகர்களுடன் பழக்கம் இருக்கிறது. அவரை கண்டாலும் ஜீவா ஓடிவிடுவார். அதை என்னிடமும் சொல்லியிருக்கிறார்" என்றார். இதனயடுத்து யார் நடிகைகள், தொகுப்பாளினி என்று ரசிகர்கள் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X