அஜித்துக்கும் அந்த ஆசை இருக்கிறது.. அப்படித்தான் நடந்துப்பார்.. சுசித்ரா சொன்ன செம சீக்ரெட்

சென்னை: பாடகி சுசித்ரா சில வருடங்களுக்கு முன்பு தலைப்பு செய்தியாக இருந்தவர். அவரது பெயரில் வெளியான சுச்சி லீக்ஸ் பல பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியே கொண்டு வந்தது. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு சைலெண்ட்டான சுசி இப்போது மீண்டும் பேச ஆரம்பித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் கொடுத்த ஒரு பேட்டியில் அஜித் குறித்து பேசியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணியாற்றியவர் சுசித்ரா. பிறகு சினிமாவில் பின்னணி பாடகியாக வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது குரலால் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் பாடல்களை பாடியிருக்கிறார். பின்னணி பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் சினிமாவில் பல நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார் சுசித்ரா.

ajith suchitra

கார்த்திக்கை பிரிந்த சுசித்ரா: தனது கரியர் பீக்கில் இருக்கும்போதே நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமாரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் வீட்டால் நிச்சயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேருக்குமான திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதற்கு முக்கிய காரணம் சுச்சி லீக்ஸ் என்று சொல்லப்படுகிறது.

சுச்சி லீக்ஸ்: கடந்த 2016ஆம் ஆண்டு கோலிவுட்டில் பெரும் புயல் அடித்தது. அதாவது சுசித்ராவின் ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து 'சுச்சி லீக்ஸ்' என்ற பெயரில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வரிசையாக வெளியாகின. தனுஷும், திரிஷாவும் ஒன்றாக இருந்தது, நிக்கி கல்ரானி, அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்டோரின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை கிளப்பின. அந்தப் புகைப்படங்கள் சுசித்ராவின் ட்விட்டர் ஐடியிலிருந்து ஒவ்வொரு நாளாக வெளியாகின. ஆனால் தனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக சுசித்ரா கூறினார். மேலும் அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டதாக கார்த்திக் குமார் கூறினார்.

தனுஷை வம்புக்கிழுத்த சுசி: நிலைமை இப்படி இருக்க அந்த விவகாரத்துக்கு பிறகு கார்த்திக்கும், சுசித்ராவும் பிரிந்துவிட்டார்கள். மேலும் சுசித்ரா ஆளே காணவில்லை. இந்தச் சூழலில் கடந்த சில மாதங்களாக பேட்டிகள் அளித்துவருகிறார். அப்படி ஒரு பேட்டியில், சுச்சி லீக்ஸ் விவகாரத்துக்கு காரணமே தனுஷ், திரிஷா, கார்த்திக் குமார் உள்ளிட்டோர்தான். அதில் என்னை வேண்டுமென்றே மாட்டிவிட்டார்கள் என சொல்லி ஏகப்பட்ட தகவல்களை கூறினார். மேலும் தனது முன்னாள் கணவர் கார்த்தி தன் பாலின ஈர்ப்பாளர் என்றும்; அவரும் தனுஷும் ஒரே அறைக்குள் சென்றார்கள் என்றும் கூறி விவாதத்தை கிளப்பினார்.

போதை பார்ட்டி: அதற்கு பிறகு அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் சுசித்ரா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்துவருகிறது. இடையில் அமைதியான சுசித்ரா இப்போது மீண்டும் பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் நடிகை ரீமா கல்லிங்கல் போதை பார்ட்டி நடத்தியதாக சொல்லி பரபரப்பை பற்ற வைத்தார்.

சுசித்ரா பேட்டி: இந்நிலையில் பலர் பற்றியும் பேசிவரும் சுசித்ரா அஜித் குறித்தும் பேசியிருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "அஜித்துக்கும் அரசியல் ஆசை இருக்கிறதுதான். அரசியலுக்கு வர வேண்டும் என ரொம்ப நாளாக பிளான் செய்கிறார். அவர் ஒருநாள் ஒன்றை சிந்திப்பார். இன்னொரு நாள் ஏதாவதொரு பைக்கை பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பார். அவர் ஒரு பட்டாம்பூச்சி மாதிரி. அதனால் அவர் அப்படித்தான் நடந்துகொள்வார். அவர் ஒரு ஜாலியான ஆள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X