சிவகார்த்திகேயன் அடுத்த விஜய்யா?.. அவங்கதானே ஒத்துக்கிட்டாங்க.. போட்டுடைத்த சுசித்ரா
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் அமரன். கமல் ஹாசன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கிறார். அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படமானது ரிலீஸாகவிருக்கும். இன்னும் ஒரு மாதம் ரிலீஸுக்கு இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ஒருபக்கம் சூடுபிடித்திருக்கின்றன. இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் அடுத்த விஜய்யா என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்துவருகிறது.
சின்னத்திரையில் தனது கரியரை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டின் பெரிய ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். விஜய் எப்படி தான் வளர்ந்துவந்த காலத்தில் சிறுவர்கள், சிறுமிகள், குடும்பத்தினரை கவர்ந்தாரோ அதேபோல் சிவாவும் வளர்ந்திருக்கிறார். அதனை விஜய்யும் ஒரு மேடையில் பாராட்டி பேசியிருந்தார். எஸ்கே நடிப்பில் கடைசியாக வெளியான அயலான், மாவீரன் ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தன. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

அமரன்: இப்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ரங்கூன் படத்தை இயக்கி மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இதில் சாய் பல்லவி ஹீரோயின். அயலான், மாவீரன் வெற்றிகளை தொடர்ந்து இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து சிவா ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் என்று அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள்.
உண்மை சம்பவம்: இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இதன் க்ளிம்ப்ஸ், டீசர் உள்ளிட்டவைகள் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. மேலும் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் பக்காவாக ஃபிட்டாகியிருக்கிறார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படமானது அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் எஸ்கேவும், அவரது ரசிகர்களும் இருக்கிறார்கள்.
GOAT சிவகார்த்திகேயன்: இதற்கிடையே விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோல் செய்திருந்தார். அந்த சீனில் துப்பாக்கியை சிவாவின் கைகளில் விஜய் கொடுத்து, கிரவுண்டில் இருக்கும் உயிர்கள் இப்போது உங்கள் கைகளில் என்று சொல்லும்படி வசனம் வந்தது. அதற்கு சிவாவோ, நீங்கள் எதோ முக்கியமான வேலையாக போகிறீர்கள். நீங்கள் அதை பாருங்க. நான் இதை பார்த்துக்கொள்கிறேன் என்று பதில் சொல்லும்படி இருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள், சிவாதான் தனது இடத்தை நிரப்பப்போகிறார் என்று விஜய்யே சொல்லிவிட்டார் என கமெண்ட்ஸ் செய்துவந்தது குறிப்பிடத்தக்கது.
சுசித்ரா பேட்டி: இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது அவரிடம், சிவகார்த்திகேயன் தான் அடுத்த விஜய் என்று சொல்கிறார்களே என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுசித்ரா, "சிவகார்த்திகேயன்தான் அடுத்த விஜய்யா என்ற டாபிக்கை ஆடியன்ஸ் சீரியஸாக எடுத்துக்கொள்ளவே வேண்டாம். ஏனெனில் சினிமாக்காரர்களுக்கு இதுபோன்று பேச்சுக்களை கிளப்புவது ரொம்ப பிடிக்கும். நடக்கும்வரை அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.
இந்த விஷயத்தை அவர்களேதான் உருவாக்கினார்கள். இதில் நாம் ஏன் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் சிவாவுக்கு என்ன ப்ரெஷர் இருக்கும். ஒத்துகொண்டுதானே இதையெல்லாம் செய்தார்கள். அதனால் அந்த பிரஷர் சிவகார்த்திகேயனுக்கு வேண்டுமென்றால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்" என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











