ப்ளீஸ் என்னை தீபிகாவின் மாஜி காதலர் என்று சொல்லாதீர்கள்: நடிகர் கோரிக்கை
மும்பை: தன்னை தீபிகா படுகோனேவின் முன்னாள் காதலர் என்று குறிப்பிட வேண்டாம் என நடிகர் நிஹார் பாண்டியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தீபிகா படுகோனே நடிக்க வந்த புதிதில் மாடல் நிஹார் பாண்டியாவை காதலித்தார். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். காதல் முறிவுக்கு பிறகு அனைவரும் நிஹாரை தீபிகாவின் முன்னாள் காதலர் என்றே கூறுகிறார்கள்.
இது நிஹார் பாண்டியாவை வருத்தம் அடைய வைத்துள்ளது.

திருமணம்
மாடலாக இருந்து நடிகராகியுள்ள நிஹார் பாண்டியாவுக்கும் பாடகி நீத்தி மோகனுக்கும் வரும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளது. அனைத்து ஊடகங்களிலும் தீபிகாவின் முன்னாள் காதலர் நிஹாருக்கு திருமணம் என்று செய்திகள் வெளியாகின. இதை பார்த்த நிஹார் வருத்தம் அடைந்துள்ளார்.

முன்னாள் காதலி
தீபிகாவுக்கு திருமணமாகிவிட்டது. அவர் மீது எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை. அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவரும் என் விஷயத்தில் அப்படித் தான் விரும்புவார் என்று நினைக்கிறேன் என்று நிஹார் பாண்டியா தெரிவித்துள்ளார்.

முன்னாள் காதலர்
செய்தி தலைப்புகளில் தீபிகாவின் முன்னாள் காதலர் என்று போடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கு என்று ஒரு அடையாளம் இருக்கிறது. நான் மணிகர்னிகா படம் மூலம் நடிகராகியுள்ளேன். அந்த செய்திகளிலும் தீபிகாவின் முன்னாள் காதலர் நடிகராகியுள்ளார் என்றே உள்ளது. இது மாறினால் நல்லது என்கிறார் நிஹார்.

லிவ் இன்
தீபிகாவும், நிஹாரும் 3 ஆண்டுகளாக லிவ் இன் முறைப்படி வாழ்ந்தனர். காதல் முறிந்தாலும் இன்னும் நல்ல நண்பர்களாக இருப்பதாக இருவருமே தெரிவித்துள்ளனர். நிஹார் தன்னை விட வயதில் பெரியவரான நீத்தியை திருமணம் செய்கிறார்.


Click it and Unblock the Notifications











