வலிச்சாலும் அமைதியா இருக்கணும்.. அந்த ’போக்கிரி’ நடிகையை ஞாபகமிருக்கா?.. லேட்டஸ்ட் பிக்ஸ் இதோ!

சென்னை: பிரபுதேவா இயக்கத்தில் தளபதி விஜய், அசின், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் படமான போக்கிரி படத்தில் மோனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

அதிலும், "என் செல்லப்பேரு ஆப்பிள்" பாடலில் "வலிச்சாலும் அமைதியா இருக்கணும்" என பிரகாஷ் ராஜ் கிரஷ் பண்ணுவாரே அவரே தான். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

Pokkiri fame actress Brindha Parekh latest swimming pool pics goes trending

போக்கிரி படத்தில் பார்த்த நடிகை இன்னமும் அப்படியே கும்மென இருக்காரே என அவரது நீச்சல் குள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

நடிகை பிருந்தா பரேக்: தெலுங்கில் 2002ம் ஆண்டு வெளியான சொந்தம் படத்தில் நடித்த பிருந்தா பரேக் 2004ம் ஆண்டு சிம்பு, ஜோதிகா நடிப்பில் வெளியான மன்மதன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மன்மதன் படத்தை தொடர்ந்து தமிழில் திருடிய இதயத்தை, சுதேசி, போக்கிரி, பொல்லாதவன், குரு என் ஆளு, சில்லுனு ஒரு சந்திப்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடா, இந்தி மற்றும் மராத்தி மொழி படங்களில் இவர் நடித்துள்ளார்.

போக்கிரி: "என்ன கை விளையாடுது 'கன்'னுல" என பிரகாஷ் ராஜின் கேங்ஸ்டர் டீமில் முரட்டு பெண்ணாக இருந்து கொண்டு விஜய்யிடம் ஜொள்ளு விடுவது முதல் பிரகாஷ் ராஜ் " வலிச்சாலும் கம்முனு இருக்கணும்" என அழுத்திப் பிடிக்கும் காட்சி என இவர் நடித்த நடிப்பு இன்னமும் ரசிகர்கள் நினைவை விட்டு இவரை நீங்காமல் வைத்திருக்கும். பல தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் போக்கிரி திரைப்படம் தான் இன்னமும் இவருக்கு அடையாளமாக உள்ளது.

Pokkiri fame actress Brindha Parekh latest swimming pool pics goes trending

சினிமாவில் இருந்து ஓய்வு: 2013 ஆம் ஆண்டு ஓவியா மற்றும் விமல் நடித்து வெளியான சில்லுனு ஒரு சந்திப்பு படத்திற்கு பிறகு அதே வந்து சில படங்களில் குத்தாட்டம் போட்ட பிருந்தா பரேக் அதன் பின்னர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. சினிமாவில் இருந்து விலகியவர் புனேவில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். ஆனாலும், சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் கனெக்‌ஷனில் உள்ளார்.

நீச்சல் குள புகைப்படங்கள்: 39 வயதாகும் பிருந்தா இந்த வயதிலும் போக்கிரி படத்தில் பார்த்தது போலவே செம ஃபிட்டாகவும் கவர்ச்சியாகவும் உள்ளார். நீச்சல் குளத்தில் குளித்து முடித்துவிட்டு சன்பாத் எடுக்க சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டு அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X