ரித்திக் ரோஷன் மீது சென்னை போலீசார் மோசடி வழக்கு!
ரித்திக் ரோஷன் மீது மோசடி வழக்கு பதிந்துள்ளனர்.
சென்னை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ரித்திக் ரோஷன். இவர் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

சன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்திவரும் சென்னையைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் ரித்திக் ரோஷன் ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என புகாரளித்துள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷன் விளம்பரத் தூதுவராக இருந்த HRX பிராண்டின் எக்ஸ்ட்ரீம் கேர் பர்ஃப்யூம் மற்றும் அழகுசாதன பொருட்களை வாங்கி விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டேன். அந்த நிறுவனம் ரித்திக் ரோஷனின் சொந்த நிறுவனம் என ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.
ஆனால், பிறகு வேறு ஒருவருக்கு கைமாறிவிட்டது. அதன் பிறகு சென்னையில் விற்பனையாகாத அந்த நிறுவனத்தின் பொருட்களை நான் திருப்பி அனுப்பிவிட்டேன். அதற்கு தரவேண்டிய ரூ.20 லட்சத்தை அவர்கள் திருப்பித் தரவில்லை என ரித்திக் ரோஷன் மற்றும் அதில் தொடர்புடைய 7 பேர் மீது புகாரளித்துள்ளார்.
இதுதொடர்பாபக அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீசுக்கு, ரித்திக் ரோஷன் விளம்பரத் தூதராக மட்டுமே செயல்படுவதாகவும், முரளிதரனின் இழப்புக்கு பொறுப்பேற்க முடியாது எனவும் ரித்திக் தரப்பிலிருந்து பதில் வந்துள்ளது. இப்போது கொடுங்கையூர் போலிசார் 420 பிரிவில் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











