Vijay: அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும்.. திரையரங்குகளில் அந்த லியோ கர்ஜனை தொடர வேண்டும்! ஏன்? இதோ 5 காரணங்கள்
சென்னை: தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் நடிகர் விஜய். இவர் நடித்த படங்கள் தோல்வியே ஆனாலும் அது விமர்சன ரீதியிலான தோல்வியாக தான் இருக்குமே ஒழிய, வணிக ரீதியாக இருக்காது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்லப்படும் பழமொழிக்கு ஏற்ற ஒரு தமிழ் சினிமா நடிகர். இவர் படம் வெளியானால் மினிமம் கேரண்டி உள்ளது என்று கூறும் அளவுக்கு இவரது படங்களுக்கு பிசினஸ் உள்ளது.
இந்நிலையில் சினிமாவில் இருந்து முழுவதுமாக வெளியேறி, அரசியலில் முழுவதுமாக கவனம் செலுத்துவதாக அறிவித்தார். இவரது ரசிகர்கள் விஜய் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று தெரிவித்தாலும், விஜய் அதை பரிசீலிப்பாரா என்பது கேள்விக்குறிதான் என்றும் கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் விஜய் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முக்கியமான ஐந்து காரணங்களைப் பார்க்கலாம்.
1. விஜய்யின் நடனம், ஸ்டைல் மற்றும் திரையில் அவர் காட்டும் அந்த தனித்துவமான எனர்ஜிக்கு ஈடு இணை கிடையாது. ஆக்ஷன் காட்சிகளில் விஜய் காட்டும் வேகம் மற்றும் மாஸ் ஒருபுறம் இருந்தாலும், அமைதியான அவரது உடல் மொழியால் ரசிகர்களை கட்டிப் போடும் திறமை இயல்பாகவே அவரிடத்தில் இருக்கிறது. முதல் நாள் முதல் காட்சிக்குச் சென்று விஜய்யை கொண்டாடும் மற்ற நடிகர்களின் அபிமான ரசிகர்களும் இருக்கிறார்கள்.

2. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் வகையில் விஜய்யின் படங்கள் இருப்பதால் அவருக்கான ஆடியன்ஸ் அனைத்து வயதிலும் உள்ளனர். நகைச்சுவை, சென்டிமென்ட் மற்றும் ஆக்ஷன், டான்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு 'பேக்கேஜ்' ஆக விஜய் படங்கள் இருப்பதால், ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்கு வரும் சூழல் உருவாகிறது. சமூக வலைதளங்களை தாண்டியும் அவருக்கு இருக்கும் இந்த 'ஃபேமிலி ஆடியன்ஸ்' ஆதரவு சினிமாவுக்குத் தேவைப்படுகிறது.
3. அட்லீ, நெல்சன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றி தமிழ் சினிமாவை இந்தியா முழுவதும் உற்று நோக்கச் செய்ததில் விஜய்யின் பங்கு மிகவும் முக்கியமானது. அது தொடர விஜய் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும்.

4. விஜய் போன்ற உச்ச நட்சத்திரத்தின் படத்துடன் தங்களது படத்தை வெளியிட எந்த தயாரிப்பாளரும் தொழில்நுட்பக் கலைஞரும் விரும்பமாட்டார்கள். அப்படி இருக்கும்போது விஜய் படத்துடன் மோதும் அளவுக்கு ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள மறைமுக காரணமாக விஜய் இருப்பார்.
5. முன்னரே கூறியது போல, இவர் நடித்த படங்கள் தோல்வியே ஆனாலும் அது விமர்சன ரீதியிலான தோல்வியாக தான் இருக்குமே ஒழிய, வணிக ரீதியாக இருக்காது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்லப்படும் பழமொழிக்கு ஏற்ற ஒரு தமிழ் சினிமா நடிகர். இவர் படம் வெளியானால் மினிமம் கேரண்டி உள்ளது என்று கூறும் அளவுக்கு இவரது படங்களுக்கு பிசினஸ் உள்ளது.


Click it and Unblock the Notifications











