Pongal Winner: பராசக்தி, வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில்.. இந்த பொங்கலோட ரியல் வின்னர் யாரு?
சென்னை: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் வெளியாகி இருந்தால் தியேட்டர்கள் எல்லாம் வெறிச்சோடி இல்லாமல் ஆம்னி பேருந்துகள் போல கூட்டம் களைகட்டியிருக்கும் என பல தியேட்டர் ஓனர்களே புலம்பி வருகின்றனர்.
கடந்த ஆண்டும் பொங்கல் ரிலீஸ் படங்கள் சுத்தமாக தியேட்டர்களை துடைத்து வைத்த நிலையில், 12 வருஷம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என விஷாலின் மத கஜ ராஜா தமிழ்நாட்டு தியேட்டர்களை வாழ வைத்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு போன வாரமே ஜனவரி 10ம் தேதி சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியானது. ஜன நாயகன் வராத நிலையில், இந்த வாரம் ஜனவரி 14ம் தேதி கார்த்தியின் வா வாத்தியார் மற்றும் ஜனவரி 15ம் தேதி ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இதில், இந்த ஆண்டு பொங்கல் வின்னர் யார் என்பது குறித்து இங்கே அலசுவோம் வாங்க..
பராசக்தி: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சுமார் 140 கோடி பட்ஜெட்டில் உருவான பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அதர்வா, ரவி மோகன் என 2 ஹீரோக்களும் டோலிவுட்டில் இருந்து ஸ்ரீலீலாவும் நடித்திருந்தனர். மேலும், கேமியோ ரோலில் பேசில் ஜோசப் மற்றும் ராணா டகுபதி உள்ளிட்ட பிரபலங்களும் நடித்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்ட படமாக வெளியான பராசக்தி திரைப்படம் இதுவரை 35.85 கோடி வசூலை இந்தியளவில் ஈட்டியுள்ளது. ஓவர்சீஸ், மற்றும் இந்தியாவில் பிற இடங்களில் எல்லாம் டோட்டல் வாஷ் அவுட்டாக இந்த படம் மாறிவிட்டது.

பிக்கப் ஆகும் வசூல்: பராசக்தி படத்துக்கு ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் குவிந்த நிலையில், 6 நாட்கள் ஆகியும் படம் பொங்கலுக்கு கூட பெரிதாக பிக்கப் ஆகவில்லை. முதல் நாளில் 12.5 கோடி வசூல் செய்த பராசக்தி பொங்கல் பண்டிகையான நேற்று வெறும் 5.10 கோடி தான் வசூல் செய்தது. ஆனால், பெரும் சரிவுக்குப் பிறகும் 2 போட்டிகளுக்கு நடுவிலும் இந்த படம் பிக்கப் ஆகியுள்ளது ஆறுதல். வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என மேலும், 3 விடுமுறை நாட்கள் உள்ள நிலையில், இந்தியாவில் அதிகபட்சமாக 50 கோடி வசூலை பராசக்தி படம் கடக்கும் என்பது தெளிவாகி உள்ளது. உலகளவில் 100 கோடி வசூலை நெருங்குவது சிரமம் தான்.

வா வாத்தியார்: நலன் குமாரசாமி இயக்கத்தில் எம்ஜிஆரை சூப்பர் ஹீரோவாக மாற்றி கார்த்தி, க்ரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்த வா வாத்தியார் திரைப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியானது. முதல் நாளில் 1.65 கோடி வசூல் செய்த வா வாத்தியார் பொங்கல் தினமான நேற்று சற்று உயர்ந்து 2.25 கோடி வசூலை ஈட்டியது. இந்த படத்துக்கும் கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், வசூலில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

தலைவர் தம்பி தலைமையில்: மலையாள இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா, பிரார்த்தனா, தம்பி ராமைய்யா, இளவரசு உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜனவரி 15ம் தேதி ஷார்ப்பாக பொங்கலுக்கு வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் முதல் நாளில் 1.30 கோடி வசூலை ஈட்டியுள்ளது. ஜீவா படம் கலகலப்பாக உள்ளதாக விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், இந்த வார இறுதியில் எந்த படம் எவ்வளவு வசூல் செய்யும் எதற்கு மக்கள் ஆதரவு தருகின்றனர் என்பது தெரியவரும்.
பொங்கல் வின்னர்: எப்படி இருந்தாலும், பாக்ஸ் ஆபீஸ் ரீதியில் இந்த பொங்கல் வின்னர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் தான். ஆனால், அந்த படமும் பட்ஜெட்டை விட குறைவான பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை கொடுத்த நிலையில், இந்த பொங்கல் கோலிவுட்டுக்கு மீண்டும் பலத்த அடி தான்.


Click it and Unblock the Notifications











