பொங்கலோ பொங்கல்...குடும்பத்துடன் கொண்டாடிய சிவகார்த்திகேயன்...

சிவகார்த்திகேயனுக்கு கடந்த ஆண்டு ஆரம்பத்தில் கடினமான நிலையாக இருந்தாலும் டாக்டர் படம் வெற்றிப்படமாக அமைந்தத்தில் அவருக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. தொடர்ந்து இந்த ஆண்டும் வெற்றிப்படத்தை அளிக்கும் முனைப்பில் இருக்கும் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடி படத்தை வெளியிட்டுள்ளார்.

 உழைப்பால் உயர்ந்த நடிகர்

உழைப்பால் உயர்ந்த நடிகர்

நடிகர் சிவகார்த்திகேயன் உழைப்பால் உயர்ந்தவர் என்று சினிமாவில் கொண்டாடப்படுபவர். தனது ஒவ்வொரு அடியையும் அளந்து எடுத்துவைத்த சிவகார்த்திகேயன் இன்று வெற்றியின் முன்னனியில் உள்ளார். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர், பட்டதாரி இளைஞர், மிமிக்ரி செய்வதில் வல்லவர், அதே காரணத்தால் தொலைக்காட்சியில் ஆங்கராக வாழ்க்கையை தொடங்கி முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற நிகழ்வு உள்ளிட்ட பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து பிரபலமாகி நடிகராக கால் பதித்து கதாநாயகனாக உயர்ந்து நிற்கிறார்.

 நகைச்சுவையே ஸ்பெஷாலிட்டி

நகைச்சுவையே ஸ்பெஷாலிட்டி

இன்றைய இளைஞர்களை கவரும் நகைச்சுவையையும், குரும்பு கலந்த காதல் கலகலப்பும் சிவகார்த்திகேயனின் ஸ்பெஷல். அவரது படத்தில் அதிக வன்முறை, ஆபாசக்காட்சிகள் இல்லாததும், நகைச்சுவை அதிகமாக உள்ளதும் குடும்பத்தினர் இடையே பெரும் வரவேற்பை பெறுவதற்கு முக்கிய காரணமாகும். மெரினா படத்தில் கதாநாயகனாக 2012 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

 மாற்றம் தந்த படங்கள்

மாற்றம் தந்த படங்கள்

தொடர்ந்து 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா போன்ற படங்களில் நடித்து நாளுக்கு நாள் புகழேனியில் ஏறிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் படம் கடந்த ஆண்டு திருப்புமுனையாக அமைந்தது.

 விரைவில் வெளியாகும் டான் படம்

விரைவில் வெளியாகும் டான் படம்

தற்போது டான் என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பாடல் வெளியாகி மில்லியன் கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு மனைவியும், 9 வயதில் மகளும், 1 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இனி சிறிய குடும்பம் அவரது குடும்பம்.

 குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை

குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை

பொங்கல் தினத்தை ஒட்டி சிவகார்த்திகேயன் தனது மனைவி குழந்தைகளுடன் பொங்கலை கொண்டாடினார். வீட்டில் பொங்கப்பானை முன் அமர்ந்துள்ளதுபோல், மனைவி குழந்தைகளுடன் பொங்கல் படைப்பதுபோல் படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் படம் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அதை ரசிகர்கள் வரவேற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X