விஜயகாந்த் மகனின் கொம்பு சீவி.. சிவகார்த்திகேயன் போல் சண்முகபாண்டியனுக்கும் கொம்பு சீவுவாரா பொன்ராம்?
சென்னை: விஜயகாந்த்தின் மகன் சண்முகபாண்டியன் கொம்பு சீவி படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். பொன்ராம்தான் சிவகார்த்திகேயனுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்று மிகப்பெரிய கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்தவர் என்பதால் இவருக்கும் அதேபோன்றொரு வெற்றியை கொடுப்பாரா என்ற கேள்வி அனைவரிடமுமே எழுந்திருக்கிறது.
விஜயகாந்த் ஒட்டுமொத்த திரையுலகத்தாலும் கொண்டாடப்பட்டவர். ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு போட்டியாக திகழ்ந்த அவர்; அரசியலில் நுழைந்து அங்கு ஏற்பட்ட சில துரோகங்கள் காரணமாக ட்ரோல் மெட்டிரீயல் ஆனவர். ஆனால் அவர் உயிரிழந்த பிறகு அவரை தமிழ்நாட்டு மக்கள் கொண்டாடினார்கள். அவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது இடத்தை அவரது மகன் சண்முகபாண்டியன் பிடிக்க வேண்டும் என்ற விருப்பமும் பலரிடமும் இருக்கிறது.
பிரேக்கிற்கு காத்திருக்கும் மகன்: அவர் ஏற்கனவே 2015ஆம் ஆண்டு சகாப்தம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு பிறகு திரைத்துறையிலிருந்து ஒதுங்கிய அவர் சமீப காலமாக மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். சினிமாவுக்கு தேவையான உடல்வாகு கொண்டிருக்கும் அவரை எப்படியாவது திரைத்துறையில் வெல்ல வைத்துவிட வேண்டும் என்பது விஜயகாந்த் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.

படுத்துவிட்ட படைத்தலைவன்: அவர் கடைசியாக படைத்தலைவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சண்முகபாண்டியனின் நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஏஐ மூலம் விஜயகாந்த்தை படத்தில் பயன்படுத்தியும் கதை, திரைக்கதை வீக்காக இருந்ததால் படைத்தலைவன் தோல்வியைத்தான் சந்தித்தது. இது ஒருபக்கம் இருக்க் விஜய்க்கு விஜயகாந்த் உதவியது போல் விஜயகாந்த் மகனுக்கு விஜய் உதவ வேண்டும் என்ற பேச்சுக்களும் எழுந்திருக்கின்றன.
கொம்பு சீவி: இப்படிப்பட்ட நிலைமையில்தன் கொம்பு சீவி படத்தில் நடித்திருக்கிறார் சண்முகபாண்டியன். இதில் அவருடன் சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் டீசர் நேற்று வெளியானது. தென் மாவட்டத்தில் நடக்கும்படி கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர். டீசரும் ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றிருக்கிறது. அவருக்கு தகுந்தபடி ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றிருப்பதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கொம்பு சீவுவாரா பொன்ராம்: முக்கியமாக இப்போதைக்கு டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயனை முதன்முதலாக அனைவரிடமும் கொண்டு சேர்த்தது என்றால் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்கள்தான். இரண்டு படங்களையும் இயக்கியவர் பொன்ராம். அவர் விஜயகாந்த் மகனுக்கு அதே போன்ற வெற்றிகளை கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பும் பலரிடமும் எழுந்திருக்கிறது.
சிவகார்த்திகேயனுக்கு போலவே இவருக்கும் கிராமத்து கதை களத்தைத்தான் பிடித்திருக்கிறார் பொன்ராம். அந்தப் படங்களை அவர் எப்படி ஃப்ரெஷ்ஷாகவும், சலிக்காத ஆக்ஷன்களாலும், காமெடிகளாலும் நிரப்பியிருந்தாரோ அதே பேக்கேஜை கொடுத்து சண்முகபாண்டியனுக்கும் கொம்பு சீவி விட வேண்டும் என்பதுதான் கேப்டன் ரசிகர்களின் ஆசை. நிறைவேற்றியிருப்பார பொன்ராம்?


Click it and Unblock the Notifications











