சத்தம் இல்லாமல் ஒரு பூஜை
அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி, நடிகர் விஜய், இயக்குனர் தரணி ஆகியோர் இணையும் புதுப் படத்தின் பூஜை சத்தம் இல்லாமல் நேற்று சென்னையில் நடந்தேறியது.
விஜய் தற்போது அழகிய தமிழ் மகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்து விட்டு உதயநிதி தயாரிக்கும் முதல் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கில்லி கொடுத்த தரணி இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.இப்படத்தின் பூஜையை நேற்று சத்தம் போடாமல் நடத்தி முடித்துள்ளனர். நாள் நன்றாக இருந்ததால் நேற்று பூஜையை வைத்துக் கொள்ள முடிவு செய்தனராம்.
இதையடுத்து வளசரவாக்கத்தில் உள்ள ஷியாமளா ஹவுஸில் படக்குழுவினர் குழுமினர்.அங்குள்ள பிள்ளையார் சிலை முன்பு பூஜை நடத்தி முடித்து விட்டு முதல் காட்சியை படமாக்கினார்களாம்.
பட பூஜை போடப்பட்டு விட்டாலும் கூட அழகிய தமிழ் மகனை முடித்த பின்னர், ஜூன் மாதத்தில்தான் புதுப் பட ஷூட்டிங் முறைப்படி தொடங்குகிறதாம்.
இப்போது விஜய் நடித்து வரும் அழகிய தமிழ் மகன் படம் கூட தரணியின் உதவியாளர் பரதன் இயக்கும் படம்தான் என்பது நினைவிருக்கலாம்.
More from Filmibeat
actor அமைச்சர் அழகிய தமிழ் மகன் இயக்குனர் உதயநிதி தரணி நடிகர் பூஜை மகன் விஜய் ஸ்டாலின் dharani film kollywood producer rocks stalin trisha udayanidhi vijay


Click it and Unblock the Notifications











