Don't Miss!
- News
பாஜகவிற்காக அதிமுக காத்திருக்கட்டும்.. கவலையில்லை.. போட்டுடைத்த நாராயணன்.. கொதிக்கும் "ரரக்கள்"
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டாப் மாடல் கார்களை வாங்கி குவிக்கும் தனுஷ்..ஒவ்வொன்னும் இத்தனை கோடியா?அப்படி என்ன ஸ்பெஷல்!
சென்னை : தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் பாடலாசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என திரையுலகில் கலக்கி வரும் தனுஷ், தற்போது வாத்தி என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் தனது அறிமுகத்தை கொடுக்க உள்ளார்
பொதுவாக பிரபலங்களுக்கு சொகுசு கார் மீது அதீத பிரியம் இருக்கும். அதேபோல் தனுஷூக்கு வகை வகையான கார்கள் மீது அளாதி பிரியம். அவருக்கு சினிமா மீது எந்தளவுக்கு ஆர்வம் இருக்கிறதோ அந்தளவுக்கு கார்கள் மீதும் ஆர்வம் அதிகம்.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் முதல் ஃபோர்டு மஸ்டாங் ஜிடி கார் வைத்திருக்கும் நடிகரின் கார் இதுவரை எத்தனை கார்களை வாங்கி குவித்து இருக்கிறார் என்று பார்க்கலாமா?
வெற்றிகரமான
3
வது
நாள்,
5
வது
நாள்
என்று
விளம்பரம்..
பாக்யராஜ்
கிண்டல்!

பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர்
இந்தியாவில் சில கோடிகள் செலவில் பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் வைத்திருக்கும் சில பிரபலங்களில் தனுஷும் ஒருவர். நடிகரின் பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் சுமார் 3.74 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக கூறப்படுகிறது. இது பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் நிறுவனமான பென்ட்லியின் பிரபலமான மற்றும் ஆடம்பரமான கார்களில் ஒன்றாகும்.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்
கருப்பு நிறத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரும் தனுஷிடம் உள்ளது. காரின் சராசரி விலை சுமார். ரூ.7 கோடி. நடிகருக்கு சொந்தமான மிக விலையுயர்ந்த கார்களில் இதுவும் ஒன்றாகும்.

ஆடி ஏ8
தனுஷின் கலெக்ஷனில் அடுத்த கார் ஆடி ஏ8, 5 இருக்கைகள் கொண்ட காராகும். இதில் 23-ஸ்பீக்கர் பேங் மற்றும் ஓலுஃப்சென் மூலம் 3D சரவுண்ட்ஸ் சவுண்ட் மியூசிக் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோலும் உள்ளது. மேலும், பின் சீட்டில் அமர்பவர்களுக்கு வசதியாக திரைகள், ஆல்-வீல்-ஸ்டியரிங், ஏர் சஸ்பென்ஷன் மற்றும் பார்க் அசிஸ்ட் பிளஸ் சிஸ்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன. ஆடி ஏ8, ஸ்வான்கி காரின் மதிப்பிடப்பட்ட விலை சுமார் 1.57 கோடி ரூபாய் ஆகும்.

ஃபோர்டு முஸ்டாங் ஜிடி
தனுஷிடம் ரூ.75 லட்சம் மதிப்புள்ள ஃபோர்டு மஸ்டாங் ஜிடி கார் உள்ளது. மேலும், ஐந்தாவதாக செடான் ஜாகுவார் XE என்ற சொகுசு காரை வைத்து இருக்கிறார். 5 இருக்கைகள் கொண்ட ஜாகுவார் XE சொகுசு கார் மிகவும் ஆடம்பரமான கார்களில் ஒன்றாகும். ஜாகுவார் எக்ஸ்இ காரின் மதிப்பிடப்பட்ட விலை சுமார் ரூ.45 லட்சமாகும்.

அடுத்தடுத்து படங்கள்
ஹாலிவுட்டில் மாஸ்காட்டி உள்ள தனுஷ் நடிப்பில் தி கிரே மேன் திரைப்படம் ஜூலை 22 அன்று நெட்ஃபிக்ஸ் இல் வெளியானது. அந்த படத்தை பார்த்து ரசிகர்கள் வெகுவாக பாராட்டினர். இதையடுத்து, செல்வராகன் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். மேலும், தமிழ் , தெலுங்கு என இருமொழியில் உருவாகி வரும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் டீசர் தனுஷின் பிறந்த நாள் அன்று வெளியானது.