twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனி நேரடி அரசியல்... 2014- தேர்தலில் போட்டி! - நடிகர் பாலகிருஷ்ணா

    By Shankar
    |

    Balakrishna
    விஜயவாடா: இனி நேரடி அரசியலில் ஈடுபட்டு, எம்எல்ஏ வாகி மக்களுக்கு நன்மை செய்யப் போவதாக முன்னாள் முதல்வர் மறைந்த என்டி ராமாராவ் மகனும் தெலுங்கு நடிகருமான பாலகிருஷ்ணா அறிவித்துள்ளார்.

    30 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. அவர், தன் தந்தை தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சியில் இப்போது உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

    இந்நிலையில், பாலகிருஷ்ணா, நேரடி அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான கண்டசாலாவுக்கு அவர் சென்றார். அங்கு என்.டி.ராமாராவ் சிலையை திறந்து வைத்தபோது, தனது அரசியல் முடிவை அறிவித்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "என் தந்தையின் லட்சியப்படி, ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு பாடுபடுவதற்காகவே, நான் நேரடி அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். தற்போதைய காங்கிரஸ் அரசு, ஏழைகள் நலனுக்காக சிறப்பான திட்டங்களை அமல்படுத்த தவறிவிட்டது.

    2014-ம் ஆண்டு நடைபெறும் ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நான் போட்டியிடுவேன். எந்த தொகுதியில் நிற்பது என்று கட்சி மேலிடம் முடிவு செய்யும். அதற்கு நான் கட்டுப்படுவேன்," என்றார்.

    English summary
    Popular actor and Telugu Desam founder N T Rama Rao's son N Balakrishna today announced his decision to join politics. Balakrishna, whose daughter is married to party president Chandrababu Naidu's son, said he would contest the next assembly elections in 2014.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X