நீச்சல்குளம்..ஜிம்..சகல வசதிகள்.. பிரபாஸின் பிரம்மாண்ட வீடு எத்தனை கோடி தெரியுமா?

ஹைதராபாத் : பாகுபலி படப்புகழ் நடிகர் பிரபாஸின் பிரம்மாண்ட வீட்டைப் பார்த்து ரசிகர்கள் வாயடைந்துப்போய் உள்ளனர்.

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரு சிறந்த நடிகராக பிரபாஸ் மாறி, தனக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து இருக்கிறார்.

தற்போது இவர், ஆதிபுருஷ், சலார் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயண இதிகாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

பிரபாஸின் ஆடம்பர பங்களா

பிரபாஸின் ஆடம்பர பங்களா

இந்நிலையில்,ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பிரபாஸின் ஆடம்பரமான வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. 60 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரம்மாண்டமான பங்களாவில் மிகப்பெரிய முகப்பும், அழகான தோட்டமும், நீச்சல் குளமும், 1.5 கோடி ரூபாயில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்கள் என வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் ரசித்து ரசித்து கட்டி உள்ளார்.

84 ஏக்கரில் பண்ணை வீடு

84 ஏக்கரில் பண்ணை வீடு

மேலும்,வீடு என்பது செல்வத்தை சேர்த்து வைக்கும் இடம் இல்லை என்றும், நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ஒரு இடம் என்று பிரபாஸ் பல பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் பிரபாஸிற்கு பீமாவரத்தில் 84 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பண்ணைவீடு ஒன்று உள்ளது. ஆனால், பிரபாஸிற்கு மிகவும் பிடித்தமான வீடு ஹைதராபாத்தில் உள்ள வீடுதானாம்.

விஐபி ஏரியா

விஐபி ஏரியா

இந்த வீட்டை சுற்றி ராமாநாயுடு ஸ்டுடியோஸ், பத்மாலயா ஸ்டுடியோஸ் மற்றும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் என ஸ்டுடியோக்கள் உள்ளன.மேலும், இந்த பகுதியில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், நடிகைகள் என பல விஐபிக்கள் தான் குடியிருக்கின்றனர்.

ஆதிபுருஷ்

ஆதிபுருஷ்

நடிகர் பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமராகவும், கீர்த்தி சனோன் சீதாவாகவும் நடித்துள்ளனர். பிரபல இயக்குனர் ஓம் ராவத் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் விமர்சனத்திற்குள்ளானது. இதனால், படத்தின் ரிலீஸ் ஜூன் 16ஆம் தேதிக்கு படக்குழு தள்ளிவைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X