அதிகாரம் இரண்டு வகை - கமல் : கூவத்தூர் கூத்தை சொல்கிறாரோ?
சென்னை: அதிகாரம் இரண்டு வகை என்று அரசியல் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் கமல் ஹாஸன்.
தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொத்தாக பேருந்துகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எங்க தொகுதி எம்.எல்.ஏ.வை காணோம், உங்க தொகுதி எம்.எல்.ஏ.வை காணோம் என்று மக்கள் சமூக வலைதளங்களில் அலறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அரசியலுக்கு வர மாட்டேன் என்று அடம் பிடித்தாலும் உலக நாயகன் கமல் ஹாஸன் தனது மனதில் பட்ட கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்.
இன்றைய கருத்து இது தான்,
அதிகாரம் இரண்டு வகைப்படும். ஒன்று தண்டனை பயத்தால் பெறுவது மற்றொன்று அன்பால் பெறுவது. மிஸ்டர் காந்தி( என் ஹீரோ) என ட்வீட்டியுள்ளார் கமல்.
Comments


Click it and Unblock the Notifications