'ஐ' மட்டும் வரட்டும் அப்புறம் பாருங்கள்: பவர் ஸ்டார் சீனிவாசன்

By Siva

சென்னை: ஷங்கரின் 'ஐ' படம் ரிலீஸானால் தனது மார்க்கெட் எகிறிவிடும் என்று பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்து வருகிறாராம்.

லத்திகா படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானவர் பவர்ஸ்டார் சீனிவாசன். அந்த படத்தை அவர் எப்படி ஓட்டினார் என்பவது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் தான் சந்தானம் அவரை தனது கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிக்க வைத்தார்.

கலாய்த்த சந்தானம்

கலாய்த்த சந்தானம்

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம் பவரை கண்டமேனிக்கு நக்கல் அடித்தார். ஆனால் பவரின் நல்ல நேரம் அதுவே அவருக்கு சாதகமாகிவிட்டது. இதயைடுத்து அவருக்கு கோடம்பாக்கத்தில் படுகிராக்கியாகிவிட்டது.

மோசடி வழக்குகள்

மோசடி வழக்குகள்

பல படங்களில் நடிக்க ஒப்பந்தமான பவர் மோசடி வழக்குகளில் சிக்கி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரை ஒப்பந்தம் செய்த சிலர் வேறு நகைச்சுவை நடிகர்களை ஒப்பந்தம் செய்துவிட்டனர். இந்நிலையில் பவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஷங்கரின் 'ஐ'

ஷங்கரின் 'ஐ'

இயக்குனர் ஷங்கரின் 'ஐ' படத்தில் பவர் நடித்துள்ளார். தான் ரோபோவாக நடித்துள்ள இந்த படத்தை தான் அவர் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் ரிலீஸானால் தனது மார்க்கெட் எகிறிவிடும் என்று திரை உலகினரிடம் தெரிவித்து வருகிறார்.

கட் அவுட்

கட் அவுட்

'ஐ' படம் ரிலீஸாகும்போது தனது செலவில் சென்னை முழுவதும் தனக்கு ராட்சத கட் அவுட் வைக்க பவர் திட்டமிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X