அப்போ ஐஸ்வர்யா… இப்போ அனுஷ்காவிற்கு ஆசைப்படும் பவர்ஸ்டார் சீனிவாசன்

By Mayura Akilan

திகார் ஜெயிலுக்கெல்லாம் போய் வந்தும் ஆசைப்பட்ட ஹீரோயின்களுடன் நடித்தே ஆகவேண்டும் என்று படு ஸ்ட்ராங்காக இருக்கிறார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

விக் வைத்தாலும்... விக்கல் எடுத்தாலும் இப்போது அனுஷ்கா அனுஷ்கா என்றுதான் அவருக்கு எடுக்கிறதாம். காரணம் சூப்பர் ஸ்டாருடன் லிங்காவில் அனுஷ்கா ஜோடி போட்டதுதான்.

எந்திரனில் சூப்பர் ஸ்டாருடன் ஐஸ்வர்யா நடித்த போது தனக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவர் தற்போது தனது ஆசையை அனுஷ்கா பக்கம் திருப்ப காரணம் சூப்பர் ஸ்டார்தானாம்.

அஜீத், விஜய் எல்லாம் பவர்ஸ்டாரின் நண்பர்களாம்.! அதனால் அவர்களுடன் போட்டி போட ஆசைப்படவில்லை என்று கூறும் பவர், தன்னுடைய ஒரே லட்சியம் சூப்பர் ஸ்டாரின் இடத்தை அடைவதுதான் என்கிறார். அவரது பேட்டியை சிரிக்காமல் படியுங்கள்...

திகார்… திகார்…

திகார்… திகார்…

திகார் ஜெயில் எனக்கு ஆசிரமம் மாதிரிதான் தெரிஞ்சது. ஜெயிலுக்கு உள்ளே இருக்கிறவங்க எல்லாரும் குற்றவாளிகளும் இல்லை; வெளியே சுத்திட்டு இருக்கிறவங்க எல்லாரும் நிரபராதிகளும் இல்லை.

2015ல் என் படங்கள்தான்

2015ல் என் படங்கள்தான்

ஷங்கர் சார்கூட 'ஐ'. அப்புறம் 'சீனி', 'கெடா பூசாரி', 'ஜெயிக்கிற குதிரை', 'அரசியல்ல இது எல்லாம் சகஜமப்பா'னு ஏகப்பட்ட படங்கள் எனக்கு இருக்கு. 2015... என் ரசிகர்களுக்கு செம வேட்டை காத்திட்டு இருக்கு.

அனுஷ்காதான் ஜோடி

அனுஷ்காதான் ஜோடி

இப்ப வரைக்கும் அனுஷ்காவை போட்டோவுல மட்டும்தான் பார்த்துட்டு இருக்கேன். என் கால்ஷீட் ஃப்ரீயா இருந்தா, நிச்சயம் அனுஷ்காகூட நடிச்சே தீருவேன்.

மெர்சலான விக்ரம்

மெர்சலான விக்ரம்

ஐ படத்தில என் நடிப்புக்கு செம தீனி போட்டிருக்காரு ஷங்கர் சார். விக்ரம்கூட, 'என்ன பவரு... செம பவர்ஃபுல்லா பண்றீங்களே'னு மெர்சலாகிட்டார்.

பவரும் சோலாரும் சேர்ந்தால்…

பவரும் சோலாரும் சேர்ந்தால்…

நான் யாருடனும் இணைந்த நடிக்க தயார். பவர், சோலார்... சேர்ந்து நடிக்கிற அளவுக்கு ஆழமான ஸ்க்ரிப்ட் கிடைக்குமா?' என்று சவால் விட்டிருக்கிறார் பவர். இயக்குநர்கள் கவனிக்கவும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X