வேஷ்டி, சட்டையில் எந்த ஹீரோ அழகு?
தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி, புடவை. பெண்களுக்கு புடவை அதுவும் பட்டுப்புடவை எப்படி பாரம்பரியமான உடையாக விஷேசமானதாக கருதப்படுகிறதோ அதேபோல் ஆண்களுக்கு வேஷ்டி பாரம்பரியமானதாகும்.
தமிழ் சினிமாவில் வேஷ்டி அணிந்து நடிப்பது அபூர்வமாக காணப்படுகிறது. ஹீரோக்கள் மாடர்ன் உடைகளில் நடிக்கத்தான் ஆசைப்படுகின்றனர். ஒருசில காட்சிகளில் மட்டும் ஏதாவது ஒரு படத்தில், பாடல் காட்சியில் வேஷ்டி அணிந்து நடித்திருப்பார்.
ரஜினி, கமல் தொடங்கி கார்த்தி வரை வேஷ்டி அணிந்து நடித்த ஹீரோக்களில் யாருக்கு பாரம்பரிய உடை அழகு என்று பட்டியலிடப்பட்டுள்ளது படியுங்களேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினி
எஜமான் திரைப்படத்தில் ரஜினியில் வேஷ்டி லுக் தனி ஸ்டைல்தான்.

உலகநாயகன் கமல்
தேவர்மகன் திரைப்படத்தில் விளையாட்டுத்தனமாக சுற்றிக்கொண்டிருந்த கமல், அப்பா சிவாஜியின் மரணத்திற்குப் பின்னர் அழகாக வெள்ளை வேஷ்டி, சட்டையில் கலக்கலாக இருப்பார். அதேபோல் மைக்கேல், மதன காமராஜன் திரைப்படத்தில் காமேஷ்வரன் கமல் வேஷ்டியில் தனி லுக்கில் இருப்பார்.

விஜயகாந்த் ஸ்டைல்
விஜயகாந்த் பல திரைப்படங்களில் கிராமத்து இளைஞனாக வேஷ்டி கட்டி நடித்திருந்தாலும் அதிகம் பேசப்பட்டது சின்னக்கவுண்டர் திரைப்படத்தில்தான். விஜயகாந்த்துக்கு வேஷ்டி கெட் அப் அசத்தல்தான்.

சரத்குமார்
வில்லனாகி அறிமுகமாகி ஹீரோவாக நடித்து வருகிறார் சரத்குமார். இவருக்கும் கிராமத்து கதாபாத்திரம் பொருத்தமாகத்தான் இருக்கும். சேரன் பாண்டியன் தொடங்கி நாட்டாமை,சிம்மராசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் வேஷ்டியில் அசத்தியிருப்பார் சரத்குமார்.

தல அஜீத்
வீரம் படத்தில் அஜீத் லுக் பட்டு சட்டை வேஷ்டிதான். ஏற்கனவே அமர்களம் படத்தில் தாதா அஜீத் வெள்ளை வேஷ்டி சட்டையில் அசத்தியிருப்பார்.

விஜய்
அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் விஜய் ஒரு பாடலுக்கு வேஷ்டியில் நடித்திருப்பார்.

சிங்கம் 2 சூர்யா
சூர்யாவிற்கு காக்கிச் சட்டை எத்தனை பொருத்தமோ வேஷ்டி சட்டையும் அதே அளவு பொருத்தம்தான்.

விக்ரம்
தூள் திரைப்படத்தில் கிராமத்து இளைஞனாக நடித்த விக்ரமிற்கு வேஷ்டி சரியான பொருத்தம்தான்.

தனுஷ்
பொதுவாகவே விழாக்களில் வேஷ்டி, சட்டையில் அசத்துவார் தனுஷ். திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தில் வேஷ்டி சட்டை கெட்அப் தனுஷ்க்கு கொஞ்சம் சுமார்தான்.

சிம்பு
சிலம்பாட்டம் திரைப்படத்தில் வேஷ்டி அணிந்து நடித்திருப்பார் சிம்பு, அதேபோல் லவ் ஆன்தம் ஆல்பத்தில் பட்டு வேஷ்டி சட்டையில் அசத்தியிருப்பார்.

கார்த்தி
பருத்தி வீரன், சகுனியில் வேஷ்டி, சட்டையில் அசத்தியிருப்பார்.கார்த்தி ஸ்டைலே தனிதான்.

ஒகே ஒகே ஆர்யா
ஒருகல் ஒருகண்ணாடி படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அதில் வேஷ்டி சட்டை நகைகள் அணிந்து அட்டகாச கெட் அப் கொடுத்திருப்பார் ஆர்யா.


Click it and Unblock the Notifications











