Prabhas Marriage: எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டீங்களா?: பெரியப்பா மீது பிரபாஸ் கோபம்
ஹைதராபாத்: பிரபாஸ் தனது பெரியப்பா மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படம் ரிலீஸான பிறகு பிரபாஸுக்கு திருமணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபாஸ் தனது பெரியப்பா மீது கோபமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபாஸ்
ஒரு முடிவு எடுக்கும் அளவுக்கு பிரபாஸ் பெரிய ஆளாகிவிட்டார். அவரை யாரும் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தவில்லை. சாஹோ படம் ரிலீஸான பிறகு பிரபாஸ் திருமணம் செய்து கொள்வார் என்று அவரின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜு அண்மையில் தெரிவித்தார்.

பெரியப்பா
கிருஷ்ணம் ராஜு தனது திருமணம் பற்றி பேட்டி கொடுத்தது பிரபாஸுக்கு பிடிக்கவில்லையாம். நான் என் கெரியரில் கவனம் செலுத்த விரும்புகிறேன். அதனால் என் திருமணம் பற்றி மீடியாவிடம் பேசாதீர்கள் என்று பிரபாஸ் தனது பெரியப்பாவிடம் பல முறை தெரிவித்துள்ளாராம்.

எரிச்சல்
பல முறை சொல்லியும் கிருஷ்ணம் ராஜு மீண்டும் மீண்டும் தனது திருமணம் பற்றி பேசுவது பிரபாஸுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இந்த காரணத்தால் அவர் தனது பெரியப்பா மீது கோபத்தில் இருக்கிறாராம்.

சாஹோ
பாகுபலி 2 படம் முடிந்த உடன் பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் சாஹோ படம் வந்துவிட்டது. அந்த படத்திற்கு நிறைய நேரம் செலவிட வேண்டியுள்ளதால் அவர் திருமணத்தை தள்ளிப் போட்டுள்ளார். சாஹோ பட வேலைகள் முடிந்த பிறகு அவர் திருமணம் பற்றி யோசிப்பார் என்று அவருக்கு நெருக்கமான ஒருவர் கடந்த மாதம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











