பிரபாஸ் பிறந்தநாள்... மிரட்டலான டீசர் வெளியிட்ட ராதே ஷ்யாம் டீம்
ஐதராபாத் : நடிகர் பிரபாஸ் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதையடுத்து அவரது நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரபாஸ்
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின்மூலம் உலகளவிலான ரசிகர்களை கொண்டுள்ளார். இந்தப் படத்திற்கு பிறகு இவரது மார்க்கெட் அனைத்து மொழிகளிலும் உயர்ந்துள்ளது. தெலுங்கில் தயாராகும் இவரது படங்கள் மற்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகின்றன.

ராதே ஷ்யாம் படம்
அவரது நடிப்பில் வெளியான சாஹோ படம் வெற்றி பெறவில்லை என்ற போதிலும் அடுத்ததாக அவர் நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்திற்கு ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்டின் பிரபாகரன் இசை
இதற்கான போஸ்டர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இரு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகளில் இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இதேபோல இந்தியில் மிதுன் -மனன் பரத்வாஜ் இசையமைத்துள்ளார்.

பிரபாஸ் பிறந்தநாள்
படத்தில் பிரபாசிற்கு பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் பிரபாஸ் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பூஜா ஹெக்டேவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மிரட்டலான டீசர் வெளியீடு
இந்நிலையில் அவரது பிறந்ததினத்தையொட்டி ராதே ஷ்யாம் படத்தின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் மிரட்டலான வகையில் அந்த டீசர் காணப்படுகிறது. படத்தில் விக்ரமாதித்யா என்ற கேரக்டரில் அவர் நடித்துள்ளது தெரிய வருகிறது. ஒவ்வொரு வசனத்தையும் கூறிவிட்டு ஆனால் நான் சொல்ல மாட்டேன் என்கிறார் பிரபாஸ்.

அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படத்தையடுத்து பிரபாஸ் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஆதிபுரஷ் உள்ளிட்ட படங்களில் பிரபாஸ் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











