இந்தியாவோட பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்.. டிரெண்டிங்கில் ஜனநாயகனை ஓரங்கட்டிய பிரபாஸ்! செம போட்டி!
ஹைதராபாத்: அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் ஜன நாயகன் படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் வெளியாகிறது. ஆனால், அதைவிட விஜய் படத்துக்கு செம போட்டியாக மாறி நிற்பது தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள 'தி ராஜா சாப்' திரைப்படம் தான்.
மலேசியாவில் பிரம்மாண்டமாக ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வரும் நிலையில், ஹைதராபாத்தில் பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தி ராஜா சாப் படத்திற்கு பெரிய அளவில் புரொமோஷன் எதுவுமே இன்னும் ஆரம்பிக்கவில்லையே என ஏங்கிய ரசிகர்களுக்காக பிரபாஸ் இன்று அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்தியாவோட பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டார்: ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தின் 2 பாகங்களும் ஒன்றாக சேர்க்கப்பட்டு பாகுபலி தி எபிக் என இந்த ஆண்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படமே மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்றது. சலார், கல்கி 2898 ஏடி என அடுத்தடுத்து வசூல் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இந்தியாவின் பிக்கஸ்ட் சூப்பர் ஸ்டாராக பிரபாஸ் மாறியுள்ளார். தமிழ் சினிமாவில் யாரும் 1000 கோடி வசூலை நெருங்க முடியாத நிலையில், 2 முறை 1000 கோடி வசூல் செய்த படங்களை தன் வசம் வைத்துள்ளார் பிரபாஸ்.
ஜன நாயகனை ஓரங்கட்டிட்டாங்க: விஜய்யின் ஜன நாயகனின் தளபதி கச்சேரி ஹாஷ்டேக் தான் சோஷியல் மீடியாவில் காலை முதலே டிரெண்டாகி வந்தது. இந்நிலையில், இன்று மாலை நடைபெற்ற தி ராஜா சாப் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பிரபாஸ் பங்கேற்ற நிலையில், "INDIA'S BIGGEST SUPERSTAR" ஹாஷ்டேக் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.
செம போட்டி: விஜய் ரசிகர்களும் சும்மா இல்லை. தளபதி விஜய்யின் என்ட்ரி காட்சிகள் வந்த நிலையில், மீண்டும் பிரபாஸ் டிரெண்டிங் உடன் போட்டிப் போட்டு வருகின்றனர். இந்த 2 ஹாஷ்டேக் தான் தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. விஜய்க்கு சரியான போட்டியாக பிரபாஸ் மாறியுள்ளார். பொங்கல் பாக்ஸ் ஆபீஸ் போட்டியில் எந்த படம் அதிக வசூல் செய்கிறது என்கிற போட்டியும் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











