Salaar Vs Dunki - சலார் vs டன்கி.. சண்டையை ஆரம்பித்த பிரபாஸ் ரசிகர்கள்.. இனி என்னவெல்லாம் நடக்கப்போகுதோ?

ஹைதராபாத்: Salaar Vs Dunki (சலார் Vs டன்கி) டன்கி படம் நாளை வெளியாகவிருக்கும் சூழலில் பிரபாஸ் ரசிகர்கள் ஷாருக்கானை கலாய்க்க தொடங்கியிருக்கிறார்கள்.

பாகுபலி மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் பிரபாஸ். அதன் இரண்டு பாகங்களுமே பான் இந்தியா படமாக வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பின. மேலும் தெலுங்கு சினிமாவும் இந்தியா முழுவதும் பெரும் வெற்றி பெற முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்வதும் பாகுபலிதான். அதன் காரணமாக பிரபாஸ் பெரிய அளவில் அறியப்பட்டார்.

சறுக்கல்கள்: பாகுபலி படம் வெற்றி பெற்றாலும் அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக வெற்றி பெறவில்லை. கடைசியாகக்கூட ஆதிபுருஷ் படத்தில் நடித்தார். அந்தப் படமும் பான் இந்தியா படமாக வெளியானது. ஆனால் கடுமையான ட்ரோல்களை சந்தித்தது படம். ஆதிபுருஷ் படத்தில் நடித்ததெல்லாம் பிரபாஸுக்கு தேவையில்லாத வேலை என்றே பலரும் கூறினார்கள்.

Prabhas fans have started Trolling for Shah Rukh Khan in the context of Dunki release tomorrow

சலார்: சூழல் இப்படி இருக்க எப்படியாவது ஒரு மெகா ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற தீவிர முனைப்பில் இருக்கிறார் பிரபாஸ். அதற்காக கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி முன்னணி இயக்குநராக திகழ்ந்துகொண்டிருக்கும் பிரசாந்த் நீலுடன் கைகோர்த்திருக்கிறார் அவர். யஷ்ஷுக்கு எப்படி மிகப்பெரிய திருப்புமுனையை பிரசாந்த் கொடுத்தாரோ அதேபோல் தனக்கும் கொடுப்பார் என்ற பெரும் நம்பிக்கையுடன் சலார் படத்தில் நடித்திருக்கிறார் பிரபாஸ்.

கவனம் ஈர்த்த ட்ரெய்லர்: படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதற்கு பலரும் பெரும் வரவேற்பை கொடுத்தார்கள். ஆனாலும் அப்படியே கேஜிஎஃப் ஸ்டைலிலேயே இருக்கிறதே என்ற விமர்சனமும் எழுந்தது. படமானது டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதில் பிரபாஸுடன் பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் சூப்பர் வரவேற்பை பெற்றது.

போட்டிக்கு டன்கி: பிரபாஸுக்கு இந்தப் படத்தின் வெற்றி ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் காரணமாக கடுமையாக அவர் உழைத்திருக்கிறார். கேஜிஎஃப் எப்படி வசூல் வேட்டை நடத்தியதோ அதேபோல் நிகழும் என்ற ஆவலில் பிரபாஸ் ரசிகர்களும் இருக்கின்றனர். ஆனால் சலாருக்கு சவால் கொடுக்கும் விதமாக ஷாருக்கான் நடித்திருக்கும் டன்கி படம் ஒருநாள் முன்னதாக நாளையே வெளியாகிறது.

ஃபுல் பார்மில் ஷாருக்: ஷாருக்கானை பொறுத்தவரை ஃபுல் பார்மில் இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பதான், ஜவான் ஆகிய இரண்டு படங்களுமே 1000 கோடி ரூபாயை அசால்ட்டாக தட்டி தூக்கின. எனவே சலாரை டன்கி சம்பவம் செய்துவிடுமோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. இந்த சூழலில் சமூக வலைதளங்களில் பிரபாஸின் ரசிகர்கள் டன்கி படத்தை கடுமையாக ட்ரோல் செய்ய ஆரமபித்திருக்கின்றனர்.

அதாவது சலார் படத்தின் டீசர் காட்சிகளை வைத்து ஷாருக்கான் பிரபாஸிடம் அடி வாங்குவது போல் எடிட் செய்திருக்கின்றனர். இதனை எதிர்பார்க்காத ஷாருக்கான் ரசிகர்களும் தங்களது பதிலடியை கொடுத்துவருகின்றனர். அதேசமயம் இப்போதே இந்த சண்டை சோஷியல் மீடியாவில் ஆரம்பித்துவிட்டதால் நாளை என்னவெல்லாம் நடக்குமோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த ரேஸில் சலார் வெல்லுமா இல்லை டன்கி வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X