twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எல்லாம் பக்காவா இருக்கு.. தப்பித்த பண்ணை வீடு.. பிரபாஸுக்கு சாதகமாக வந்த ஹைகோர்ட் தீர்ப்பு!

    |

    ஹைதராபாத்: பாகுபலி நடிகர் பிரபாஸின் பண்ணை வீட்டை இடிக்கக் கூடாது என்று தெலுங்கானா உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

    பாகுபலி, சாஹோ என பல நூறு கோடி பட்ஜெட் படங்களில் நடித்து உலகளவில் பிரபலமாகி இருக்கிறார் தெலுங்கு நடிகர் பிரபாஸ்.

    சமீபத்தில் பாகுபலி படத்தின் 2ம் பாகம் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி தீர்த்தனர்.

    இதுதான் அந்தப் படத்தோட கடைசி நாள் ஷூட்ல எடுத்தது.. அனுஷ்காவுடன் அஞ்சலி எடுத்த சியாட்டில் போட்டோ!இதுதான் அந்தப் படத்தோட கடைசி நாள் ஷூட்ல எடுத்தது.. அனுஷ்காவுடன் அஞ்சலி எடுத்த சியாட்டில் போட்டோ!

    84 ஏக்கர்

    84 ஏக்கர்

    தெலங்கானாவின் ராய்துர்கா எனும் பகுதியில் அமைந்துள்ள பன்மக்தா கிராமத்தில் உள்ள 84 ஏக்கர் நிலத்தை தெலங்கானா அரசு சமீபத்தில் அரசு நிலம் என்று அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அங்கிருந்த ஆக்ரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அதேபகுதியில் தான் நடிகர் பிரபாஸின் பண்ணை வீடு உள்ளது.

    பண்ணை வீடு

    பண்ணை வீடு

    கடந்த 2018ம் ஆண்டு பூதாகரமாக கிளம்பிய இந்த பிரச்சனையின் காரணமாக அங்கிருந்த நடிகர் பிரபாஸின் பண்ணை வீட்டுக்கும் அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், அங்கிருந்த கட்டிடங்களை இடித்தது போலவே, அந்த பண்ணை வீட்டையும் இடித்து தரமட்டமாக்க போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிரபாஸ் வழக்கு

    பிரபாஸ் வழக்கு

    தனது பண்ணை வீட்டிற்கு சீல் வைத்த செய்தி அறிந்த நடிகர் பிரபாஸ் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், தான் நேர்மையான முறையிலேயே அந்த இடத்தை வாங்கியதாகவும், தனது பண்ணை வீட்டை அரசு ஆக்கிரமிக்கக் கூடாது என்றும் தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த இரு ஆண்டுகளாக அந்த வழக்கு நடைபெற்று வருகிறது.

    வறுமை கோட்டுக்கு கீழ்

    வறுமை கோட்டுக்கு கீழ்

    வரைமுறைப்படுத்தப்பட்ட விதியின் கீழ் தான் இந்த பண்ணை வீட்டை நடிகர் பிரபாஸ் வாங்கியதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விவாதத்தை முன் வைத்தார். அப்போது அரசு தரப்பு, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்குத் தான் வரைமுறைப்படுத்தப்பட்ட விதி பொருந்தும் என கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இடிக்கக் கூடாது

    இடிக்கக் கூடாது

    இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த தெலுங்கானா உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம் நடிகர் பிரபாஸின் பண்ணை வீட்டை இடிக்கக் கூடாது என்று தற்போது தீர்ப்பு வழங்கி இருக்கிறது. முன்னதாக பிரபாஸின் வழக்கறிஞர் பல வருடங்களுக்கு முன்னதாக 1.05 கோடி கொடுத்து இந்த நிலத்தை வாங்கியதற்கான சான்றுகளை சமர்பித்து இருந்தார்.

    ஓ டியர்

    ஓ டியர்

    சாஹோ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராதாகிருஷ்ண குமார் இயக்கத்தில் தனது 20வது படத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ஓ டியர் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அடுத்ததாக நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஷ்வின் படத்திலும் பிரபாஸ் நடிக்கவுள்ளார்.

    English summary
    Prabhas' plot near Hyderabad has been disputed by the government for years. The Telugu superstar has got a reprieve with the High Court of Telangana ordering status quo on the matter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X