இத்தாலியில் பிரபாஸுடன் திஷா பதானி.. வெளியான போட்டோக்களை பார்த்து கலாய்க்கும் ஃபேன்ஸ்!
ஹைதராபாத்: கல்கி படத்தில் நடித்து வரும் நடிகை திஷா பதானி சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வரிசையாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழில் சூர்யாவுடன் இணைந்து கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதேபோல தெலுங்கில் பிரபாஸ் உடன் இணைந்து கல்கி எனும் பிரம்மாண்ட படத்திலும் நடித்து வருகிறார்.

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் கல்கி படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பசுபதி, தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
பிரம்மாண்ட பிரபாஸ்: பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் என்றாலே பிரபாஸ் தான் ஹீரோ என இயக்குநர்கள் முடிவு செய்து அவரை புக் செய்து வருகின்றனர். ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்த பிரபாஸுக்கு தொடர்ந்து பலநூறு கோடி பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆதி புருஷ் படத்தில் பிரபாஸின் தோற்றம் கிண்டல் செய்யப்பட்ட நிலையில், சலார் படத்தில் அவரது தோற்றத்தைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

நடிகையர் திலகம்: கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட அந்த படம் கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. அந்தப் படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் பிரபாஸை வைத்து பல ஆண்டுகளாக உருவாக்கி வரும் படம் தான் கல்கி 2898 ஏடி. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி என 2 பாலிவுட் நடிகைகள் பிரபாஸுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இத்தாலியில் பிரபாஸ்: கடந்த மாதம் இத்தாலியில் கல்கி படத்துக்கான பாடல் சூட்டிங் ஒன்று நடைபெற்றது. பிரபாஸ் மற்றும் திஷா பதானி அதில் கலந்து கொண்டனர். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் நடிகை திஷா பதானி வெளியிட்டுள்ளார். அதில் பிரபாஸ் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பியூட்டி அண்ட் தி பீஸ்ட்: திஷா பதானியின் அழகைப் பார்த்து சொக்கி போன ரசிகர்கள் பிரபாஸின் பிரம்மாண்ட தோற்றத்தை பார்த்து ஷாக் ஆகியுள்ளனர். பியூட்டி அண்ட் தி பீஸ்ட் படத்தின் ரீமேக்காக கல்கி படம் உருவாகிறதா எனக் கேட்டு கலாய்த்து வருகின்றனர்.
மூக்கு ரொம்ப பெருசா இருக்கு: சலார் படத்தில் பிரபாஸின் கை விரலே துப்பாக்கி அளவுக்கு இருக்கு என ரசிகர்கள் ஷாக் ஆகி வந்த நிலையில், தற்போது காருக்குள் திஷா பதானி பிரபாஸ் உடன் எடுத்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் மூக்கு சைஸ் என்ன இப்படி இருக்கு என பயங்கரமாக நடிகர் பிரபாஸை நெட்டிசன்கள் உருவ கேலி செய்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் நாக் அஸ்வின் போஸ்ட் புரொடக்ஷனில் பட்டி டிக்கெரிங் பார்த்து பிரபாஸை பக்காவாக திரையில் காட்டி விடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











