பிரபாஸ் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம்.. மனம் திறந்து பேசிய தாய்

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் ஃபேமஸ் ஹீரோக்களில் ஒருவர் பிரபாஸ். பாகுபலி மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட அவர் இப்போது பான் இந்தியா ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவர் நடித்த கல்கி திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்தப் படத்தில் வில்லனாக கமல் ஹாசன் நடித்திருந்தார். இந்தச் சூழலில் பிரபாஸ் எதற்காக இன்னமும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து அவரது ட் ஹாய் விளக்கமளித்திருக்கிறார்.

தெலுங்கில் மட்டும் அறியப்பட்ட பிரபாஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக வலம் வர ஆரம்பித்த அவர் கடைசியாக கல்கி படத்தில் நடித்தார். பாகுபலி போல் நிச்சயம் இந்தப் படமும் தனக்கான அடையாளமாக மாறும் என்ற பெரும் நம்பிக்கையில் அவர் இருந்தார்.

prabhas anushka

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்துக்கு முன்னதாக அவர் நடிப்பில் வெளியான சலார், ஆதிபுருஷ் ஆகிய இரண்டு படங்களுமே தோல்வியடைந்ததால்; இந்தப் படத்தையும் தோல்வியாக கொடுத்து ஹாட்ரிக் தோல்வியை பெற்றுவிடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தார் பிரபாஸ். படமும் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவானது. மேலும் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி என பான் இந்தியா ஸ்டார்களையும் இந்தப் படத்தில் கமிட் செய்தார்கள் படக்குழுவினர்.

படுதோல்வி: ஆனால் எதிர்பார்த்தபடி படத்துக்கு ரிசல்ட் கிடைக்கவில்லை. அதிகம் நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்தன. முக்கியமாக கமல் ஹாசன், அமிதாப் பச்சனை எல்லாம் படத்தில் நடிக்க வைத்து வேஸ்ட் ஆக்கிவிட்டார்கள் என்றும் ஓபனாக கூறினர் ரசிகர்கள். இதனால் படக்குழு அப்செட்டானது. முக்கியமாக பிரபாஸ் உச்சக்கட்ட அப்செட்டானார். அடுத்ததாக அவரது நடிப்பில் வரவிருக்கும் கண்ணப்பா படமாவது பிரபாஸை காப்பாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நோ திருமணம்: இதற்கிடையே பிரபாஸுக்கு 46 வயதாகிறது. ஆனால் அவர் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். மேலும் நடிகை அனுஷ்காவும், பிரபாஸும் பாகுபலி படத்தில் நடித்தபோது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது; ஆனால் அது பாதியில் முடிந்துவிட்டது. இதன் காரணமாகத்தான் அவர்கள் இருவருமே இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள் என்றெல்லாம் தகவல்கள் பரவிக்கொண்டிருந்தன. இந்நிலையில் பிரபாஸின் தாய் சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

பிரபாஸின் தாய் பேட்டி: அந்தப் பேட்டியில் பேசிய அவர், "எனது மகன் பிரபாஸுக்கு ரவி என்கிற நண்பர் இருக்கிறார். ரவியின் திருமண வாழ்க்கை நன்றாக அமையவில்லை. அந்தத் திருமண வாழ்க்கை ரொம்பவே போராட்டம் நிறைந்ததாக இருந்தது. அதை அவரும் சகித்துக்கொண்டார். இருந்தாலும் அந்தத் திருமண வாழ்க்கை கடைசியில் கசப்பான முடிவுக்கு வந்துவிட்டது. எனவே திருமண வாழ்க்கை என்றாலே இப்படித்தான் விரைவில் பாதியில் முடிந்துவிடும் என்கிற எண்ணம் பிரபாஸின் மனதில் ஆழமாக ஊன்றிவிட்டது. இதனால்தான் அவர் திருமணத்தில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X