ஸ்டேட் விட்டு ஸ்டேட் சாப்பாடு ஆர்டர் பண்ணும் பிரபாஸ்.. சென்னை டு மும்பைக்கு பறந்த ஸ்பெஷல் உணவு!

ஹைதராபாத்: பாகுபலி படத்துக்குப் பிறகு பான் இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸ், உணவு மீதான தனது தீராத காதல் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியும் இதை நகைச்சுவையாகப் நக்கலடித்தும் உள்ளார். அதிலும், பிரபாஸ் சில சமயங்களில் வேறு மாநிலங்களில் இருந்தும் உணவு ஆர்டர் செய்வதாக கிடைத்த தகவல்கள் வதந்தி அல்ல அத்தனையும் உண்மையே என்று அவரே உறுதிப்படுத்தியிருப்பது தான் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

கல்கி படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு பிரபாஸ் நடித்து வந்த ராஜாசாப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியான அந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ஆதிபுருஷ் பார்த்து எந்தளவுக்கு வேதனை அடைந்தார்களோ அதைவிட டபுள் மடங்கு அப்செட் ஆகிவிட்டனர்.

Prabhas Orders Special Food from Chennai to Mumbai Shoot Surprises Film Crew
Photo Credit:

சிரஞ்சீவியின் மன வரபிரசாத் காரு பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கூட பிரபாஸ் படத்தை புரட்டி எடுத்துவிட்டது.

ஸ்பிரிட் வந்தால் சரவெடி தான்: அவ்வப்போது சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் மற்றும் ராஜாசாப் என சொதப்பல் படங்களையும் பிரபாஸ் கொடுக்கத் தவறியதே இல்லை. அதே நேரம் ஒரு படம் சொதப்பினாலும் அடுத்து சலார், கல்கி 2898 ஏடி என கம்பீரமாக கம்பேக் கொடுத்து 1000 கோடி வசூல் நாயகன் என்பதை நிரூபித்து விடுவார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்பிரிட் படம் வெளியானால் ராஜாசாப் ட்ரோல்களை ரசிகர்கள் மறந்து விடுவார்கள்.

ஸ்டேட் விட்டு ஸ்டேட் சாப்பாடு: மும்பையில் 'ஆதிபுருஷ்' படப்பிடிப்பின்போது, அந்த படக்குழுவினர் சோர்வாக உணர்ந்த ஒரு 'சீட் மீல்' நாளில், பிரபாஸ் அதனை சிறப்பாக்க விரும்பினார். "இன்று உங்களுக்கு ஸ்பெஷல் உணவைக் கொண்டு வருகிறேன்," என்று அறிவித்து, வேறு எதுவும் சாப்பிட வேண்டாம் என உறுதியாகச் சொன்னார்.

இரவு 10, 11 மணி எனக் கடந்து, இரண்டு-மூன்று மணி நேரம் காத்திருந்தும் உணவு வரவில்லை. "அது எங்கிருந்து வருகிறது, பிரபாஸ்?" என்று கேட்கப்பட்டபோது, அவர் சாதாரணமாக "சென்னையிலிருந்து," என்றார். மும்பையில் உள்ள உள்ளூர் சென்னை ஸ்டைல் உணவகம் என நினைத்திருந்த அனைவரும் இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னையிலிருந்து ஸ்பெஷல் சாப்பாடு: உண்மையில், அந்த உணவு சென்னையிலிருந்து விமானம் மூலம், சூடாகவும் சுவையாகவும் இருக்க, சிறப்புப் பெட்டிகளில் பேக் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டது. "இது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றினாலும், அசல் சுவையே எனது விருப்பம். நான் வீட்டுச் சுவையைத் தவறவிடுகிறேன்," என்று பிரபாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார். Couple Friendly படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரபாஸ் சென்னையில் வசித்த அனுபவத்தை தமிழிலேயே பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X