எனக்கு திருமணமாகாததற்கு இதுதான் காரணம்… மனம் திறந்த பிரபாஸ்!
மும்பை : பாகுபலி படத்திற்குப் பிறகு, தென்னிந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் புகழ் பெற்ற நடிகராக மாறியுள்ளார் பிரபாஸ்
Recommended Video
ராதே ஷ்யாம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய பிரபாஸ், இதுவரை திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை கூறினார்.
ராதே ஷ்யாம் திரைப்படம் மார்ச் 11ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

பிரபாஸ்
பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் பிரபாஸ். நடிகர் பிரபாஸிற்கு தற்போது 42வயதாகிறது. பாகுபலி படப்பிடிப்பின் போது 6 ஆயிரம் பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து இருந்தனர். ஆனால், அனைத்து பெண்களின் கோரிக்கையும் பிரபாஸ் நிராகரித்தார்.

அனுஷ்காவுடன் கிசுகிசு
பாகுபலி படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி கேமிஷ்டிரி பக்காவாக இருக்கும். அந்த நேரத்தில் இவர்கள் இருவரின் பெரும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது. அதேபோல, சாஹோ படத்திலும் அனுஷ்காவின் பெயரை பிரபாஸ் சிபாரிசு செய்திருந்தார். அனுஷ்கா, அப்போது குண்டாக இருந்ததால் அந்த கதாபாத்திரம் ஷ்ரத்தா கபூருக்கு சென்றது.

காதல் பற்றி உங்கள் கணிப்பு
இந்நிலையில், ராதே ஷ்யாம் திரைப்படத்தின் இந்திப் பதிப்பின் டிரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அப்போது பிரபாஸிடம் ஒருவர், காதல் பற்றிய உங்கள் கணிப்புகள் சரியாக இருக்காது என்று டிரெய்லரில் ஒரு டயலாக் வருகிறது. நிஜவாழ்க்கையில் உங்கள் கணிப்பு எப்படி என்று கேட்டார்.

திருமணமாகாததற்கு இதுதான் காரணம்
இதற்கு சிரித்துக்கொண்ட பதிலளித்த பிரபாஸ், காதல் பற்றிய என் கணிப்புகள் எப்போதும் தவறாகவே இருக்கும். அதனால்தான் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறினார். பிரபாஸின் இந்த பலரின் கவனத்தை நிச்சயம் ஈர்த்து இருக்கும்.

பல மொழிகளில் ரிலீஸ்
ராதே ஷியாம் திரைப்படம், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், சீனம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் மார்ச் 11 தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பாக்யஸ்ரீ, சச்சின் கடேகர், முரளி சர்மா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











