விஜய் நம்பர் ஒன் கிடையாது.. சலார் வசூல் செய்த தரமான சம்பவம்.. தென்னிந்தியாவின் டெமி காட் பிரபாஸ்!

சென்னை: இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாள் வசூல் சாதனை படைத்திருந்தது. மேலும், இந்த ஆண்டு தென்னிந்தியாவில் அதிக வசூல் ஈட்டிய படமாகவும் லியோ இருந்தது. ஆனால் தற்போது அந்த இரண்டு சாதனைகளையும் நடிகர் பிரபாஸ் தனது சலார் படத்தின் மூலமாக துவம்சம் செய்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. ஆனாலும் அந்த படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருந்தது. முதல் நாள் அதிகபட்சமாக 140 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து ஜான் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்து நம்பர் ஒன் இடத்தை லியோ பிடித்தது. சோலோ ரிலீசாக வெளியாகி இப்படி ஒரு சாதனையை லியோ நிகழ்த்தி காட்டியது.

Prabhas Salaar movie beats Vijays Leo Day 1 box office record this year

சலார் முதல் நாள் வசூல்: இந்நிலையில் பாலிவுட் படமான டங்கி படத்துடன் நேருக்கு நேர் மோதிய பிரபாஸ் இன் சலா திரைப்படம் உலக அளவில் அதிகபட்சமாக 165 முதல் 175 கோடி ரூபாய் வரை முதல் நாள் வசூல் இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் நிறுவனர்கள் கணிப்பை வெளியிட்டுள்ளனர்.

விஜய்க்கு இரண்டாம் இடம்: இந்த ஆண்டு தென்னிந்தியாவின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக நடிகர் விஜய் இருந்து வந்த நிலையில், அவர் இரண்டாம் இடத்திற்கு தள்ளி விட்டுள்ளார் நடிகர் பிரபாஸ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு, ஈஸ்வரி ராவ், பாபி சிம்ஹா, மைம் கோபி, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள சலார் திரைப்படம் முதல் நாளில் இப்படி ஒரு அதிரடி சாதனையை படைத்து முதல் நாள் வசூலில் இந்த ஆண்டின் ரெக்கார்டு ஓப்பனிங் படமாக மாறியுள்ளது. இன்று மாலை இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை Hombale Films நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 வருடத்திற்கு பிறகு: பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடித்து வந்த சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் இந்த ஆண்டு வெளியான ஆதி புருஷ் உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்த நிலையில் சலார் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக இன்று எதிர்பார்க்கப்படுகிறது.

சலார் படத்துக்கும் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில். முதல் வாரத்துக்கு பிறகு வசூலில் மிகப் பெரிய அடி விழ வாய்ப்புகள் இருப்பதாக பாக்ஸ் ஆபிஸில் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், பிரபாஸை படத்தில் பத்ரகாளி போல பிரசாந்த் நீல் காட்டியுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் படத்தை தினமும் சென்று பார்த்து பாகுபலி படம் போல பிரம்மாண்ட வெற்றியை சாத்தியமாக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. இந்த படத்தின் வெற்றியை பொறுத்து தான் சலார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1000 கோடி வருமா?: நடிகர் பிரபாஸ் அடுத்ததாக மாருதி படத்தில் நடித்து வருகிறார். சலார் படம் பெரிய வெற்றி அடைந்து 1000 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டினால் சலார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் எனத் தெரிகிறது. மேலும், பிரசாந்த் நீல் யஷ் நடிப்பில் கேஜிஎஃப் 3ம் பாகத்தை எப்போது உருவாக்குவார் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X