Prabhas: வாடகை வீட்டில் வசிக்கும் பிரபாஸ்.. மாசத்துக்கு ஜஸ்ட் 60 லட்சம் தானாம்.. ராஜ வாழ்க்கை தான்!
சென்னை: சலார் படத்தின் வெற்றியை ஒருவழியாக ருசித்த பிரபாஸ் உடனடியாக லண்டனில் வாடகை வீட்டில் ஓய்வெடுத்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்ததாக கல்கி மற்றும் ராஜாசாப் உள்ளிட்ட படங்கள் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில், 60 லட்சம் ரூபாய் மாசம் வாடகைக்கு பிரபாஸ் செலவழித்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
ஆதிபுருஷ் மற்றும் சலார் படங்களுக்காக தனது தோற்றத்தை ரொம்பவே பிரம்மாண்டமாக மாற்றிய பிரபாஸ் முகத்தில் பொழிவு எல்லாம் போய் விட்டது என நெட்டிசன்கள் அதிகமாக ட்ரோல் செய்தனர்.

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான சலார் படத்தில் கூட ஆக்ஷன் காட்சிகளில் அனல் தெறிக்கவிட்ட பிரபாஸ் முகத்தில் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் நடித்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
எதிர்பார்த்த வெற்றி இல்லை: கேஜிஎஃப் 2 படத்தின் மூலம் 1100 கோடி வசூலை கன்னட சினிமாவிலேயே சாதித்துக் காட்டியவர் தான் இயக்குநர் பிரசாந்த் நீல். ஆனால், அதன் பின்னர் பிரபாஸ் உடன் அவர் இணைந்து தெலுங்கு திரையுலகில் உருவாக்கிய சலார் திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வசூலை ஈட்டும் என எதிர்பார்த்த நிலையில், வெறும் 700 கோடிக்கும் குறைவான வசூலைத்தான் ஈட்டியதாக தகவல்கள் வெளியாகின. விமர்சன ரீதியாகவும் அந்த படம் மிகப்பெரிய அடி வாங்கியது. ஆனால், சாஹோ, ராதே ஷ்யாம் மற்றும் ஆதிபுருஷ் படங்களுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்றும் கல்கி படம் பிரபாஸை மீண்டும் 1000 கோடி நாயகனாக மாற்றும் என்கின்றனர்.
லண்டனில் ரெஸ்ட்: ஹைதராபாத்தில் இருந்தால் பிரபாஸ் வெளியே எங்கேயும் நிம்மதியாகவே செல்ல முடியாது. ஒரு பெருங்கூட்டமே அவரை சுற்றிக் கொள்ளும். மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படம் முழுக்க முழுக்க செட்டில் எடுக்கப்பட்டதற்கு காரணமே அதுதான் என்கின்றனர். இந்நிலையில், சலார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கல்கி படத்தின் சூட்டிங்கை முடித்து விட்ட நிலையில், அடுத்து ராஜாசாப் படத்தின் சூட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக லண்டனில் ஓய்வெடுத்து வருகிறாராம் பிரபாஸ்.

60 லட்சம் வாடகை: லண்டனில் ஹோட்டல் எல்லாம் எடுத்து தங்கினால் பிரைவசி இருக்காது என்பதால் ஒரு வீட்டை வாடகைக்கு வாங்கி தனது நெருங்கிய நண்பர்களுடன் ஜாலி செய்து வருகிறார் பிரபாஸ் என்கின்றனர். சொகுசாக ஒரு அபார்ட்மென்ட்டையே வாடகைக்கு எடுத்துள்ள பிரபாஸ் அதற்காக மட்டும் மாதம் 60 லட்சம் செலவு செய்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கமலுடன் கல்கியில்: நாக் அஸ்வின் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து கல்கி படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். அந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாக கூறுகின்றனர். போஸ்ட் புரொடக்ஷன் எல்லாம் முடிந்து இந்த ஆண்டு வெளியாகி விடும் என்றும் மகாபாரத கனெக்ஷன் இந்த படத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











