The Rajasaab Box Office: பராசக்தி எல்லாம் கிட்டக்கூட வரமுடியாது.. ஆனால், 400 கோடி பட்ஜெட்டுக்கு, இந்த வசூல்?

ஹைதராபாத்: மாருதி இயககத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார், விடிவி கணேஷ், அம்மு அபிராமி, பொம்மன் இரானி மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் வெளியான பிரபாஸின் தி ராஜசாப் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

கடந்த ஆண்டு தெலுங்கு திரையுலகில் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் வெளியானது. ஆனால், அந்த படம் வசூலில் சொதப்பி விட்டது. இந்நிலையில், பிரபாஸின் தி ராஜாசாப் திரைப்படம் தெலுங்கு திரையுலகை காப்பாற்றும் என்றும் பார்த்தால் இதுவரை அந்த படம் உலகளவில் செய்துள்ள வசூல் மிகவும் குறைவு என்றே கூறுகின்றனர்.

Prabhas s The Rajasaab beats Parasakthi and Chiranjeevi movie at Box Office but
Photo Credit:

தளபதி விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகாத நிலையில், ஓவர்சீஸிலும் பிரபாஸ் படத்துக்கு எந்தவொரு போட்டியும் இல்லை. ஆனால், 400 கோடி பட்ஜெட்டில் உருவான படம் இதுவரை குறைவான வசூலையே ஈட்டியிருப்பதாக கூறுகின்றனர்.

112 கோடி வசூல்: பிரபாஸின் தி ராஜாசாப் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் 112 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக பீப்பிள் மீடியா ஃபேக்டரி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சாக்னிக் வெப்சைட் தி ராஜாசாப் திரைப்படம் வியாழன் ப்ரீமியர் காட்சி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்தியாவிலேயே இந்த படம் 108 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகளவில் எவ்வளவு?: முதல் நாளில் 112 கோடி ரூபாய் வசூல் செய்த பிரபாஸின் தி ராஜாசாப் திரைப்படத்தின் 2வது மற்றும் 3வது நாள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. உலகளவில் இதுவரை அந்த படம் 150 கோடி ரூபாய் வசூலை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தயாரிப்பு நிறுவனம் இன்று 200 கோடி வசூல் போஸ்டரையாவது வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Prabhas s The Rajasaab beats Parasakthi and Chiranjeevi movie at Box Office but
Photo Credit:

400 கோடி பட்ஜெட்: ஆனால், பிரபாஸின் 400 கோடி பட்ஜெட் படமான தி ராஜாசாப் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து விடுமோ என்கிற அச்சம் தான் எழுகிறது. சிரஞ்சீவி, நயன்தாரா படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், சங்கராந்தி வசூல் வேட்டையை தி ராஜாசாப் சோலோவாக அள்ள முடியாத சூழல் உருவாகி உள்ளது. இந்த வாரம் படம் எந்தளவுக்கு வசூல் செய்கிறதோ அதை பொறுத்துதான் படத்தின் வெற்றி உறுதியாகும் என்கின்றனர். பிரபாஸின் வயதான லுக் முதல் நாளில் நீக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று முதல் வயதான தோற்ற காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எப்படி இருந்தாலும், பிரபாஸுக்கு தி ராஜாசாப் படம் ரொம்ப சுமாரான படமாகவே மாறி நிற்கிறது. தி ஸ்பிரிட் திரைப்படம் தான் 1000 கோடி வசூல் படமாக மாறும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X