Pongal 2026: பொங்கல்னு கூட பார்க்காமல் வைகை புயலை நடனப் புயல் பாடாய் படுத்தறாரே.. ஒரே சிரிப்பு!

சென்னை: இந்த ஆண்டு பொங்கல் வெகு சிறப்பாக தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. வெள்ளித்திரை பிரபலங்கள் தொடங்கி, சின்னத்திரை பிரபலங்கள் வரை பலரும் தங்கள் ரசிகர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தங்களது பொங்கல் கொண்டாட்டம் தொடர்பான வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் பொங்கல் தினத்தில் நடன புயல் பிரபு தேவாவும் வைகைப் புயல் வடிவேலுவும் இணைந்து காலை உடற்பயிற்சி செய்யும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதில் பிரபுதேவா செய்த உடற்பயிற்சியை செய்ய முடியாமல் வடிவேலு திணறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Prabhu Deva and Vadivelu Fun And Jolly Pongal 2026 Celebration Video Which Looks Comedy
Photo Credit:

இந்த வீடியோவைப் பகிர்ந்த பிரபு தேவா, " தை பிறந்தால் வழி பிறக்கும். உடற்பயிற்சி செய்தால், உடம்பு சிறக்கும்.""இப்படிக்கு, புயலும் புயலும்." இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டு ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் லைக்குகளையும் கமெண்ட்களையும் வாரி வழங்கி வருகிறார்கள். குறிப்பாக இவங்க கூட்டணி திரையில் மட்டும் இல்லாமல் தரையிலும் செம ஜாலியா இருக்கே என்று தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X