நடன புயல் பிரபுதேவா பிறந்தநாள்.. ஆத்தாடி அவருக்கு இத்தனை கோடி சொத்தா?.. மாஸ்டர் மிரட்டுறாரே

சென்னை: பிரபுதேவா இந்திய அளவில் ஃபேமஸான நடன அமைப்பாளர், நடிகர், இயக்குநர் என்று பல முகங்களை கொண்டிருக்கிறார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அவர் புகழப்படுகிறார். அவர் புகழின் உச்சியில் இருந்தாலும் அவரை சுற்றி நிறைய சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன. முக்கியமாக நடிகை நயன்தாராவுடன் அவர் இணைத்து பேசப்பட்டார். அந்தக் காதல் முறிவுக்கு பிறகு இன்னொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார். இந்தச் சூழலில் பிரபுதேவா இன்று தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவர்.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படுபவர் பிரபுதேவா. இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் ஏராளமான நடன அமைப்பாளர்கள் பிரபுதேவா மற்றும் அவரது அண்ணன் ராஜுசுந்தரம் க்ரூப்பில் ஆடியவர்கள்தான். தற்போதைய நடன அமைப்பாளர்கள் பிரபுதேவாவை தங்களது குருவாக இன்னமும் பார்த்துவருகிறார்கள். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சென்று அவர் ஃபெர்பார்மன்ஸ் செய்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். குறிப்பாக மைக்கேல் ஜாக்சனின் நிகழ்ச்சி ஒன்றிலேயே தனது க்ரூப்புடன் நடனம் ஆடியவர் பிரபுதேவா.

நடிகர் பிரபுதேவா: முதலில் தனது தந்தை சுந்தரத்தின் நடன க்ரூப்பில் டான்ஸராக இருந்த அவர்; அவ்வப்போது ஒரு பாடலுக்கு மட்டும் திரையில் தோன்றி நடனம் ஆட ஆரம்பித்தார். அதன் பிறகு நடிகராகவும் தமிழ் சினிமாவில் கோலோச்ச ஆரம்பித்தார் அவர். படு எதார்த்தமான நடிப்பு அவரது பலங்களில் ஒன்று. அவர் நடித்த காதலன், மின்சார கனவு, மிஸ்டர் ரோமியோ, டைம், பெண்ணின் மனதை தொட்டு. வானத்தை போல என பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அவரது நடிப்புக்கென்று இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

Prabhu Deva Birthday Today

மீண்டும் நடிக்க வந்த பிரபுதேவா: நடன அமைப்பாளர், நடிகர் என்பதை தாண்டி பிரபுதேவா நல்ல இயக்குநரும்கூட. தெலுங்கில் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் ஹிட்டானதைத் தொடர்ந்து தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஹிந்தியிலும் வாண்டட், ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட படங்களை இயக்கினார். எனவே இந்தியா முழுவதும் தெரிந்த இயக்குநராகவும் அவர் ஜொலித்துக்க்கொண்டிருக்கிறார். கடைசியாக ஜாலியோ ஜிம்கானா, GOAT ஆகிய படங்களில் நடித்தார்.

திருமணங்கள்: அவர் முதலில் ரமலத் என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு பிறந்த இரண்டு மகன்களில் ஒரு மகன் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து நடிகை நயன்தாராவை காதலித்தார் பிரபு. இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்த சூழலில் அந்த ஜோடி பிரிந்தது. ரமலத், நயன்தாரா ஆகியோரை பிரிந்த அவர் அடுத்ததாக ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அவர்களுக்கு சமீபத்தில்தான் ஒரு மகள் பிறந்தார்.

மகனை அறிமுகம் செய்த பிரபுதேவா: இரண்டாவது திருமணம் செய்து பிள்ளை பெற்றாலும் தனது முதல் மனைவிக்கு பிறந்த மகன் மீது அலாதி பிரியம் வைத்திருக்கிறார் அவர். சமீபத்தில்கூட சென்னையில் அவர் கான்செர்ட் ஒன்றை நடத்தினார். அதில்தான் தனது மகனை முதன்முறையாக பொது சமூகத்துக்கு அறிமுகப்படுத்தினார். தந்தையை போலவே மகனும் நடனத்தில் பட்டையை கிளப்புகிறார். இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் தனது இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் கோயில்களுக்கும் அடிக்கடி செல்கிறார் அவர்.

பிரபுதேவா சொத்து மதிப்பு: இந்நிலையில் பிரபுதேவா இன்று தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவரும் சூழலில் அவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மைசூர் அருகே அவருக்கு ஏக்கர் கணக்கில் இடம் இருக்கிறதாம். மேலும் சென்னை, மும்பை ஆகிய இடங்களிலும் சொகுசான வீடுகளும் இருக்கின்றன. அவரிடம் பென்ஸ், பிஎம்டபிள்யூ எம் 4, Audi Q7 உள்ளிட்ட கார்களும் இருக்கின்றனவாம். ஆகமொத்தம் அவரிடம் 170 கோடி ரூபாய்வரை சொத்து மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

Disclaimer: பிரபுதேவாவின் சொத்து மதிப்பு என்று இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் இணையத்தில் இருந்து திரட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எவ்வளவு உண்மைகள் இருக்கிறது என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X