பிரபு தேவாவின் கிசுகிசு நாயகிகள்- இப்போ சிக்கியிருப்பவர் சோனாக்ஷி சின்ஹா!

By Shankar

தன்னோடு நடிக்கும் அல்லது தன் இயக்கத்தில் நடிக்கும் அத்தனை நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்ட 'பெருமை' பிரபு தேவாவுக்கு மட்டுமே உண்டு.

முதல் படத்தில் உடன் நடித்த ரோஜா தொடங்கி, இப்போது அவர் இயக்கத்தில் நடித்த சோனாக்ஷி சின்ஹா வரை பிரபு தேவாவுடன் கிசுகிசுக்கப்பட்டவர்களே.

சரி.. அந்த விவரத்தையும் பார்த்துடுவோம்...

ரோஜா

ரோஜா

பிரபு தேவாவின் முதல் நாயகி.. ஹீரோயின் ரோஜாதான். தொடர்ந்து அவருடன் சில படங்களில் நடித்தவர். சூரியனில் ஒற்றைப் பாடலுக்கு பிரபுதேவா ஆடினார். அந்தப் படத்திலிருந்தே ரோஜாவுடன் அவர் நெருக்கம் காட்டியதாக செய்திகள் வந்தன. இத்தனைக்கும் அவர் செல்வமணி கஸ்டடியில்தான் அப்போதும் இருந்தார். பின்னர் இந்து, ராசய்யா, ஏழையின் சிரிப்பில் என பல படங்களில் தொடர்ந்து இருவரும் நடித்தனர்.

நக்மா

நக்மா

பிரபு தேவா - நக்மா கிசுகிசு அன்றைக்கு ரொம்ப பிரபலம். காதலன் படத்தில் நக்மாதான் பிரபுதேவாவின் நாயகி. அடுத்து இருவரும் லவ் பேர்ட்ஸிலும் இணைந்து நடித்தனர். இந்த நேரத்தில் ரம்லத்தை காதலித்து ரகசிய திருமணமும் செய்து கொண்டிருந்தார் பிரபுதேவா. ஆனால் கிசுகிசுக்களுக்குப் பஞ்சமில்லாமல் தொடர்ந்தது.

காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம்

சார்லி சாப்ளின் படத்தில் நடித்தபோது இருவருக்கும் சண்டை என்று முதலில் செய்தி வந்தது. ஆனால் பின்னர் இருவரும் இரவு நீண்ட நேரம் வரை டான்ஸ் ரிகர்சல் பார்த்ததாக கிசுகிசு வந்தது!

நயன்தாரா

நயன்தாரா

வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியான நயன்தாரா, நிஜத்தில் பிரபு தேவாவுடன் டூயட் பாடுவது செய்தியாக வராத பத்திரிகை அல்லது இணையதளமே இல்லை எனும் அளவுக்குப் போனது. இதனால் பிரபுதேவா வீட்டில் குழப்பம், ரமலத்தை விவாகரத்து செய்தது என பரபரப்பு உச்சத்துக்குப் போனது. முதல் முறையாக இந்த கிசுகிசுவைத்தான் நிஜம் என ஒப்புக் கொண்டார் பிரபுதேவா. விரைவில் நயன்தாராவுடன் திருமணம் என்றெல்லாம் அறிவித்தார், முதல் மனைவி இருக்கும்போதே. ஆனால் பின்னர் நயன்தாராவும் பிரபுதேவாவும் பிரிந்துவிட்டதாக அறிவித்து அவரவர் வழியில் போய்க்கொண்டுள்ளனர்.

ஹன்சிகா

ஹன்சிகா

நயன்தாராவை பிரபு தேவா பிரிவதற்கு முக்கிய காரணமே ஹன்சிகாவுடன் அவர் நெருக்கமாக இருந்ததுதான் என செய்திகள் வெளியாகின. எங்கேயும் காதல் படத்துக்காக இருவரும் பிரான்ஸ், சுவிஸ் என கேம்ப் அடித்தபோது இந்த காதல் தீ பற்றிக் கொண்டதாகவும், இதைக் கேள்விப்பட்டு நயன்தாராவே சுவிஸ் போனதாகவும் செய்திகள் வந்தது நினைவிருக்கலாம்.

ஆரம்பத்தில் அமைதி காத்த ஹன்சிகா, பின்னர் பிரபு தேவா எனக்கு அண்ணன் மாதிரி என்றார். ஆனாலும் அந்த அண்ணனுடன் தொடர்ந்து அவர் சுற்றிக் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கள் வந்து கொண்டுதான் இருந்தன.

சோனாக்ஷி சின்ஹா...

சோனாக்ஷி சின்ஹா...

இந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் சோனாக்ஷி சின்ஹா. இந்தியில் முன்னணி நடிகை. பிரபுதேவாவின் ரவுடி ரத்தோர் நாயகி. இதே சோனாக்ஷியை வைத்துதான் மீண்டும் ஆர் ராஜ்குமார் படத்தை இயக்கி வருகிறார் பிரபுதேவா. இருவரும் மகா நெருக்கமாக உள்ளதாகவும் அடுத்த படத்துக்கும் சோனாக்ஷி தான் நாயகி என்றும் செய்திகள் வருகின்றன.

சரீ... ரொம்ப நெருக்கம்னா திருமணம் செஞ்சுக்குவாங்க.. இன்னொருத்தருக்கு ஜோடியா நடிக்கவா விடுவாங்க... என்னமோ போங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X