மீட் மிஸ்டர் பிரபுதேவா அன்ட் பிரபுதேவா
மும்பை: நடிகரும், இயக்குனருமான பிரபுதேவாவுக்கு அவரது பாலிவுட் ரசிகர்கள் மெழுகுச் சிலை வைத்துள்ளனர்.
நயன்தாராவை பிரிந்த பிறகு பிரபுதேவா பாலிவுட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டும் அவரை ரீமேக் மன்னன் என்று புகழாரம் செய்து தலையில் வைத்து கொண்டாடுகிறது.
இந்நிலையில் பிரபுதேவாவுக்கு அவரது பாலிவுட் ரசிகர்கள் மெழுகுச் சிலையை செய்துள்ளனர்.

சிலை திறப்பு விழா
மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லோனாவாலா மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் பிரபுதேவாவின் மெழுகுச் சிலை திறப்பு விழா நடந்தது.

போஸ்
சிலையை திறந்து வைத்து அதன் அருகில் நின்று பார்த்து அதிசயிக்கும் பிரபுதேவா.

பிரபு அன்ட் பிரபு
பயபுள்ள அச்சு அசலா என்னை மாதிரியே இருக்கு என்று சொல்கிறாரோ பிரபுதேவா.

இவர் தான்
இவர் தாங்க இந்த மெழுகுச் சிலையை செய்தார் என்று விரைலைக் காட்டுகிறார் பிரபு.

மனதில் ஸ்பெஷல் இடம்
தன்னை பெருமைப்படுத்திய பாலிவுட் ரசிகர்களுக்கு தன் மனதில் ஸ்பெஷல் இடத்தை கொடுத்துள்ளாராம் பிரபுதேவா.(அப்போ தமிழ் ரசிகர்களுக்கு?)

சிலை
சிலையின் தோளில் கையை வைத்து அதைப் பார்த்து பிரபுதேவா சிரிக்க அதுவும் அவரைப் பார்த்து சிரிப்பது போன்று இருக்கிறதல்லவா?

சம்பளம்
பிரபுதேவாவுக்கு பாலிவுட்டில் ரூ.15 கோடி சம்பளம் தருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











