பிரபுதேவா பிறந்தநாள்.. நடன புயலின் சொத்து மதிப்பு இவ்வளவா?.. அடேங்கப்பா அசத்துறாரே
சென்னை: இந்திய அளவில் பிரபலமானவர் பிரபுதேவா. நடன அமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பல முகங்களை கொண்டிருப்பவர். இப்போது வடிவேலுவுடன் பேங் பேங் படத்தில் நடித்துவருகிறார். இவர்கள் இரண்டு பேரும் ஏற்கனவே சேர்ந்து நடித்த படங்கள் எல்லாம் சூப்பரான வரவேற்பை பெற்றவை. எனவே இந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் பிரபுதேவா தனது 52ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
80களில் பிரபலமாக இருந்தவர் நடன அமைப்பாளர் சுந்தரம் மாஸ்டர். அவரது க்ரூப்பில் டான்ஸராக பயணத்தை ஆரம்பித்த பிரபுதேவா குறுகிய காலத்திலேயே நடன அமைப்பாளராக பதவி உயர்வு அடைந்தார். விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலருக்கும் கோரியோகிராஃபி செய்த அவர்; இந்து படத்தில் நடித்து ஹீரோவாகவும் அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனையடுத்து காதலன், டைம், பெண்ணின் மனதை தொட்டு, மனதை திருடிவிட்டாய், அள்ளி தந்த வானம் என ஏராளமான படங்களில் நடித்து 90களில் பிஸியான ஹீரோவாக ஜொலித்தார்.

மிஸ் செய்த படங்கள்: நடனத்தின் எப்படி தனக்கான தனி முத்திரையை அவர் பதித்திருந்தாரோ அதேபோல நடிப்பிலும் சக்கைப்போடு போட்டார். அவரது எதார்த்தமான நடிப்பு அவரது பலங்களில் ஒன்றாக மாறியது. எந்த ரோலாக இருந்தாலும் அனாயசமாக அவர் செய்வதால் பல இயக்குநர்கள் அவரை மனதில் வைத்து கதை எழுத தொடங்கினார்கள். காதல் கொண்டேன், சொல்லாமலே உள்ளிட்ட படங்களில் எல்லாம் பிரபுதேவாதான் முதலில் ஹீரோவாக நடிக்க வேண்டியவர்.
இயக்குநர் அவதாரம்: நடன அமைப்பாளர், நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலித்தார். அவர் தெலுங்கில் இயக்கிய Nuvvostanante Nenoddantana திரைப்படம்தான் இங்கே உனக்கும் எனக்கும் என ரீமேக் ஆனது. மேலும் தமிழில் விஜய்யை வைத்து போக்கிரி படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தார். அந்தப் படம் தவிர்த்து வெடி, வில்லு, எங்கேயும் காதல் ஆகிய படங்களையும் இயக்கினார். எங்கேயும் காதல் ஃபீல் குட் படமாக அமைந்தது. தெலுங்கு, தமிழ் தவிர்த்து ஹிந்தியிலும் வான்டட், ரவுடி ரத்தோர் என ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார்.
பெர்சனல் லைஃப்: அவரது பெர்சனல் லைஃப் கொஞ்சம் சர்ச்சையை சந்தித்ததுதான். முதலில் ரமலத்தை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; அடுத்ததாக நடிகை நயன்தாராவை தீவிரமாக காதலித்தார். அதற்காக ரமலத்தை விவாகரத்தும் செய்தார். ஆனால் நயனுடனான உறவு அடுத்தக்கட்டத்துக்கு நகரவில்லை. தொடர்ந்து மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து பெண் குழந்தைக்கு தந்தையாகி செட்டிலாகியிருக்கிறார். இந்நிலையில் அவர் இன்று தனாது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
சொத்து மதிப்பு: அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அவரிடம் மொத்தம் 175 கோடி ரூபாய்வரைக்கும் சொத்து இருக்கிறதாம். சென்னை, மும்பை, ஹைதராபாத்தில் சொகுசு பங்களாக்களையும் வைத்திருக்கிறாராம். நடனம் அமைப்பதற்கு ஒரு படத்துக்கு 50 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக வாங்கும் அவரிடம், 'Bentley Continental, BMW M4,Audi Q7,Benz GLW Glass ஆகிய சொகுசு கார்களும் வரிசையாக நிற்கின்றனவாம்.


Click it and Unblock the Notifications














