இரண்டாவது திருமணம்.. பெண் குழந்தை.. கோயில் கோயிலா டூர்.. பிரபுதேவா எடுத்திருக்கும் முடிவு இதுவா?

சென்னை: இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் பிரபுதேவா. இவர் முதலில் ரமலத் என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்த இரண்டு மகன்களில் ஒரு மகன் உயிரிழந்துவிட்டார். அதனைத் தொடர்ந்து நடிகை நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் பாதியில் முறிந்தது. சூழல் இப்படி இருக்க மருத்துவர் ஹிமானியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சமீபத்தில்தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்ததிலிருந்து பிரபுதேவாவின் நடத்தையில் மாற்றம் தெரிவதாக ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவின் மூத்த நடன இயக்குநர்களில் ஒருவர் சுந்தரம். அவரது இரண்டாவது மகன் பிரபுதேவா. படிப்பு சரியாக வராததால் தனது தந்தை நடனம் அமைக்கும் பாடல்களில் க்ரூப் டான்சராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். அதன்படி அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்ற ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்ற பாடலில் முதன்முறையாக நடனம் ஆடினார். அதனைத் தொடர்ந்து சோலோவாக நடனம் ஆட ஆரம்பித்த அவர் ஒருகட்டத்தில் நடன அமைப்பாளராகவும் மாறினார்.

டாப் கோரியோகிராஃபர்: பிரபுதேவாவால் நடனம் ஆட வராதவர்களையும் நடனம் ஆட வைக்க முடியும். விஜயகாந்த்துக்கு அவ்வளவாக நடனம் வராது. ஆனால் அவரையும் ஸ்டைலாக ஆட வைத்தவர் பிரபு. அதேபோல் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கும் மிக அழகாக கோரியோகிராஃபி செய்து அமர்க்களப்படுத்தினார். இப்போது கோலிவுட்டில் இருக்கும் பல நடன அமைப்பாளர்கள் பிரபுதேவாவின் க்ரூப்பில் நடனம் ஆடியவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பலருக்கு அவர் குரு ஸ்தானத்தில் இருக்கிறார்.

Prabhu Deva often visits temples with his second wife

இயக்குநர்: நடன அமைப்பாளராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலிப்பவர் அவர். தெலுங்கில் இயக்குநராக அறிமுகமான அவர் தமிழில் விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு ரவி மோகனை வைத்து எங்கேயும் காதல், விஷாலை வைத்து வெடி உள்ளிட்ட படங்களை இயக்கினார். அதேபோல் பாலிவுட்டிலும் சல்மான் கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோரை இயக்கியிருக்கிறார். இப்போது அவர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகன் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கும் படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

திருமண சர்ச்சை: இதற்கிடையே தன்னுடன் க்ரூப் டான்சராக இருந்த ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பிரபுதேவா. அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். அவர்களில் ஒரு மகன் இறந்துவிட்டார். சூழல் இப்படி இருக்க வில்லு படத்தை இயக்கியபோது அதில் ஹீரோயினாக நடித்த நயன்தாராவுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவருக்காக நயன் ஹிந்து மதத்துக்கும் மாறினார். இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பாக்கப்பட்ட சூழலில் திடீரென பிரிந்துவிட்டார்கள். இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையாகவும், விவாதமாகவும் மாறியது குறிப்பிடத்தக்கது.

Prabhu Deva often visits temples with his second wife

இரண்டாவது திருமணம்: சூழல் இப்படி இருக்க அவர் பிசியோதெரபிஸ்ட் ஹிமானி என்பவரை திருமணம் செய்திருக்கிரார். இரண்டு பேருக்கும் சமீபத்தில்தான் பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை பிறந்த சமயத்தில் பேட்டியளித்த பிரபுதேவா கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவிலிருந்து விலகிவிடுவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ரமலத்துக்கும் தனக்கும் பிறந்த மகனை சமீபத்திய தனது கான்செர்ட்டில் அறிமுகப்படுத்தினார். அவரைப் பார்த்த ரசிகர்கள் அப்படியே பிரபுதேவா போல் நடனமாடுகிறாரே என்று கமெண்ட்ஸ் செய்தனர்.

ஆன்மீகத்தில் குதித்த பிரபுதேவா: இது ஒருபக்கம் இருக்க பிரபுதேவாவுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் உண்டு என்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் பெண் குழந்தை பிறந்த பிறகு அவரது ஆன்மீக ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே செல்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட பல ஆலயங்களுக்கு தனது இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையோடு அடிக்கடி சென்றுகொண்டிருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்களோ சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகி குடும்பம், ஆன்மீகம் என நிம்மதியாக வாழ்வதற்கான அறிகுறியை ரசிகர்களிடம் இதன் மூலம் பிரபுதேவா காண்பிக்கிறாரோ என்று கேள்விகளை எழுப்பிவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X