இந்த வயதில் பிரபுதேவா இப்படி ஒரு ரொமான்ஸா?.. 3 பேருடன் ஒரே வீட்டில்.. என்னென்னமோ செய்றாரு.. ச்சீ ச்சீ ஓவர்
சென்னை: இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று கொண்டாடப்படும் பிரபுதேவா பிரபல ஹீரோவும்கூட. நடனத்தில் எப்படி சாதித்துக்காட்டினாரோ அதேபோல் நடிப்பிலும் பெயர் வாங்கியவர். இடையில் நடிப்பிலிருந்து ரெஸ்ட் எடுத்திருந்த அவர் சமீபமாக மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் Wolf என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் அனசுயா, ராய் லட்சுமி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.
பிரபுதேவா என்றாலே அவரது ரப்பர் போன்ற உடலும், அசர வைக்கும் நடனமும் நினைவுக்கு வரும். எலும்புகள் இல்லாமல் வாங்கி வந்தது என்று வாலி மிஸ்டர் ரோமியோ படத்தின் பாடலில் ஒரு வரி எழுதியிருப்பார். பிரபுதேவாவின் நடனத்தை பார்க்கையில் உண்மையில் அவரது உடலில் எலும்புக்கு பதில் ரப்பர்தான் இருக்கிறதோ என்ற சந்தேகமே அனைவருக்கும் வரும். அந்த அளவுக்கு உடலை எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் வளைத்து ஆடக்கூடியவர்.
நடிப்பிலும் கிங்: நடனத்தில் பட்டையை கிளப்பியது போன்ரு நடிப்பிலும் அட்டகாசப்படுத்தினார். ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்த அவர் 90களில் மினிமம் கியாரண்டி ஹீரோ என்ற பெயரையும் வைத்திருந்தார். அவரை நம்பி பணம் போட்டால் முதலுக்கு மோசமில்லை என்ற நிலைதான் நீடித்தது. முக்கியமாக துறுதுறுவென்று அவர் நடித்தது அனைவரையும் ரசிக்க வைத்தது.

இயக்கத்திலும் அப்படித்தான்: நடிப்பு, நடனத்தில் எப்படி கோலோச்சினாரோ அப்படி இயக்கத்திலும் கெத்து காண்பித்தார். சித்தார்த், விஜய், சல்மான் கான், அக்ஷய் குமார் என பல நடிகர்களை வைத்து படங்கள் இயக்கி மெகா ஹிட்டை கொடுத்த இயக்குநர் அவர். இதற்கிடையே ரமலத் என்பவரை திருமணம் செய்து பல வருடங்கள் வாழ்ந்துவிட்டு பிரிந்த அவர்; நயன்தாராவை காதலித்து பிரேக் அப்பை சந்தித்து இப்போது இன்னொரு பெண்ணை திருமணம் செய்து செட்டிலானார்.
மீண்டும் நடிக்க வந்த பிரபுதேவா: இரண்டாவது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. எனவே நடிப்பிலிருந்து கொஞ்சம் கொஞசமாக ஒதுங்க ஆரம்பித்திருக்கிறார். தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்கும் அவர் இப்போது Wolf என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதனை வினோ வெங்கடேஷ் இயக்க; ராய் லட்சுமி, அனசுயா, அஞ்சு குரியன் என பலர் நடித்திருக்கிறார்கள். 2023ஆம் ஆண்டே இப்படம் ரிலீஸாகவிருந்த நிலையில் இந்த வருடம்தான் ரிலீஸாகவிருக்கிறது.
இப்படி ஒரு ரொமான்ஸா?: இந்நிலையில் படத்திலிருந்து சா சா என்ற சிங்கிள் பாடலின் வீடியோ வெளியாகியிருக்கிறது. இப்பாடலில் ராய் லட்சுமி, அனசுயா, வசிஸ்டா ஆகியோர் பிரபுதேவாவுடன் காட்டுத்தனமாக ரொமான்ஸ் செய்திருக்கிறார்கள். மூன்று பேரும் காதல் ரசம் சொட்ட சொட்ட பிரபுதேவாவை அந்தப் பாடலில் அணுகிய விதத்தை பார்த்த ரசிகர்கள், என்ன இது இந்த வயதில் இப்படி ஒரு ரொமான்ஸ் பாட்டில் நடித்திருக்கிறாரே இதெல்லாம் எங்கே போய் முடியப்போகிறதோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அதுமட்டுமின்றி இப்பாடலின் வீடியோ சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications