மும்பையில் பல கோடி ரூபாய்க்கு வீடுகள்.. விற்றுவிட்ட பிரபுதேவா?.. எவ்வளவுக்கு விற்றார் தெரியுமா?

சென்னை: இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று கொண்டாடப்படும் பிரபுதேவா பிரபல ஹீரோவும்கூட. நடனத்தில் எப்படி சாதித்துக்காட்டினாரோ அதேபோல் நடிப்பிலும் பெயர் வாங்கியவர். இடையில் நடிப்பிலிருந்து ரெஸ்ட் எடுத்திருந்த அவர் சமீபமாக மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அடுத்ததாக அவரது நடிப்பில் மூன் வாக், பேங் பேங் ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரபுதேவா என்றாலே அவரது ரப்பர் போன்ற உடலும், அசர வைக்கும் அசுரத்தனமான நடனமும்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். எலும்புகள் இல்லாமல் வாங்கி வந்தது என்று வாலி மிஸ்டர் ரோமியோ படத்தின் பாடலில் ஒரு வரி எழுதியிருப்பார். பிரபுதேவாவின் நடனத்தை பார்க்கையில் உண்மையில் அவரது உடலில் எலும்புக்கு பதில் ரப்பர்தான் இருக்கிறதோ என்ற சந்தேகமே அனைவருக்கும் வரும். அந்த அளவுக்கு உடலை எந்தக் கோணத்தில் வேண்டுமானாலும் வளைத்து ஆடக்கூடியவர்.

Prabhu Deva Sells Mumbai Flats Worth 15 Crore Fans Surprised

நடிப்பிலும் கிங்தான்: நடனத்தில் பட்டையை கிளப்பியது போன்ரு நடிப்பிலும் அட்டகாசப்படுத்தினார். ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்த அவர் 90களில் சக்சஸ்ஃபுல் ஹீரோ என்ற பெயரையும் வைத்திருந்தார். அவரது எக்ஸ்பிரெஷன்களே பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் காதல் கொண்டேன், சொல்லாமலே உள்ளிட்ட படங்கள் எல்லாம் முதலில் அவரிடம்தான் சென்றன. ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல இயக்குநர்களுக்கு முதல் ஆப்ஷன் ஹீரோவாக அவர் இருந்தார்.

Also Read
திரிஷாவின் அம்மா சும்மாவே இருக்கமாட்டாங்களா?.. விஜய் பிரச்னையில் செய்த அடுத்த செய்கை.. என்ன பிளான்?
திரிஷாவின் அம்மா சும்மாவே இருக்கமாட்டாங்களா?.. விஜய் பிரச்னையில் செய்த அடுத்த செய்கை.. என்ன பிளான்?

இயக்கத்திலும் வென்ற பிரபுதேவா: நடிப்பு, நடனத்தில் எப்படி கோலோச்சினாரோ அப்படி இயக்கத்திலும் கெத்து காண்பித்தார். சித்தார்த், விஜய், சல்மான் கான் என பல நடிகர்களை வைத்து படங்கள் இயக்கி மெகா ஹிட்டை கொடுத்த இயக்குநர் அவர். இதற்கிடையே ரமலத் என்பவரை திருமணம் செய்து பல வருடங்கள் வாழ்ந்துவிட்டு பிரிந்த அவர்; நயன்தாராவை காதலித்து பிரேக் அப் செய்தார். அதனையடுத்து இன்னொரு பெண்ணை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

மீண்டும் நடிக்க வந்த பிரபுதேவா: இரண்டாவது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. எனவே நடிப்பிலிருந்து கொஞ்சம் கொஞசமாக ஒதுங்க ஆரம்பித்திருக்கிறார். தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் அவரது நடிப்பில் அடுத்ததாக பேங் பேங், மூன் வாக் ஆகிய படங்கள் வருகின்றன. மேலும் மீண்டும் படம் இயக்குவதற்கு அவர் முடிவு செய்திருப்பதாகவும்; விரைவில் அதுகுறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது.

புதிய தகவல்: இந்நிலையில் பிரபுதேவா பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாலிவுட்டில் அதிகம் பணியாற்றியதன் காரணமாக மும்பையில் இருக்கும் மகாலட்சுமி பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் மொத்தம் இரண்டு வீடுகளை வாங்கியிருந்தார். அந்த வீடுகள் 33, 34ஆவது மாடியில் இருக்கிறது. தற்போது அந்த இரண்டு வீடுகளையும் கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய்க்கு அவர் சில காரணங்களால் விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. சில நாட்களூக்கு முன்புதான் பத்திர பதிவும் முடிந்ததாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X