பணம் வர ஒரு நாள்தான் தாமதம்.. சட்டென மாறிய பிரபுதேவா.. க்ளாசிக் படத்தை மிஸ் செஞ்சிருக்காரே
சென்னை: பிரபுதேவா இந்திய அளவில் ஃபேமஸான நடன அமைப்பாளர், நடிகர், இயக்குநர் என்று பல முகங்களை கொண்டிருக்கிறார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அவர் புகழப்படுகிறார். அவர் புகழின் உச்சியில் இருந்தாலும் அவரை சுற்றி நிறைய சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன. இப்போது சர்ச்சைகள் எல்லாம் ஓய்ந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்து செட்டிலாகியிருக்கிறார் அவர்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படுபவர் பிரபுதேவா. இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் ஏராளமான நடன அமைப்பாளர்கள் பிரபுதேவா மற்றும் அவரது அண்ணன் ராஜுசுந்தரம் க்ரூப்பில் ஆடியவர்கள்தான். தற்போதைய நடன அமைப்பாளர்கள் பிரபுதேவாவை தங்களது குருவாக இன்னமும் பார்த்துவருகிறார்கள். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சென்று அவர் ஃபெர்பார்மன்ஸ் செய்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். குறிப்பாக மைக்கேல் ஜாக்சனின் நிகழ்ச்சி ஒன்றிலேயே தனது க்ரூப்புடன் நடனம் ஆடியவர் பிரபுதேவா.
நடிகர் பிரபுதேவா: முதலில் தனது தந்தை சுந்தரத்தின் நடன க்ரூப்பில் அக்னி நட்சத்திரம் படத்தில் டான்ஸராக இருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு பாடலுக்கு மட்டும் திரையில் தோன்றி நடனம் ஆட ஆரம்பித்தார். அப்போது அவரது நடனம் பலரையும் கவர்ந்தது. அதன் பிறகு நடிகராகவும் தமிழ் சினிமாவில் கோலோச்சினார். இந்து படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி பிரபல்யத்தை பெற்றார். தொடர்ந்து அவர் நடித்த காதலன், மின்சார கனவு, மிஸ்டர் ரோமியோ, டைம், பெண்ணின் மனதை தொட்டு என பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

இயக்குநர் பிரபுதேவா: நடன அமைப்பாளர், நடிகர் என்பதை தாண்டி பிரபுதேவா நல்ல இயக்குநரும்கூட. தெலுங்கில் Nuvvostanante Nenoddantana என்ற படத்தில் டைரக்டராக அறிமுகமானார். அந்தப் படத்தின் ஹிட்டுக்கு பிறகு தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஹிந்தியிலும் ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட படங்களை இயக்கினார். எனவே அவர் பான் இந்தியா இயக்குநராக மாறினார். அதேபோல் நடிப்பையும் விடவில்லை அவர். அந்தவகையில் கடைசியாக அவர் GOAT, ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
சர்ச்சைகள் சூழ்ந்த பிரபுதேவா: ஒருபக்கம் அவர் புகழின் உச்சியில் இருந்தாலும் மறுபக்கம் சர்ச்சைகளையும் சந்தித்தவர் பிரபு. முதலில் ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். 2 மகன்களில் ஒருவர் இறந்துவிட்டார். சூழல் இப்படி இருக்க ரமலத்தை பிரிந்த பிரபுதேவா நடிகை நயன்தாராவுடன் லிவிங்கில் இருந்தார். ஆனால் அந்த ரிலேஷன்ஷிப்பும் பாதியில் முடிந்தது. பிறகு மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது சர்ச்சைகள் எதையும் சந்திக்காமல் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருக்கிறார்.
மகள் மீது உயிர்: இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு அவர் ஒரு கான்செர்ட்டை நடத்தினார். அதில் தனது மூத்த மகனை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டாவது மனைவிக்கு பிறந்த பெண் குழந்தை மீதும் பெரிய பாசத்தை வைத்திருக்கும் அவர்; விரைவில் சினிமாவில் பணியாற்றுவதை படிப்படியாக குறைத்துக்கொள்வேன். இனி மகளுக்காக முழு வாழ்க்கையை வாழப்போகிறேன் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
மிஸ் செய்த பிரபுதேவா: இந்நிலையில் ஒரு க்ளாசிக் படத்தை பிரபுதேவா மிஸ் செய்த விஷயம் தெரியவந்திருக்கிறது. அதாவது சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் படத்தில் முதலில் பிரபுதேவாதான் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியிருந்தாராம். ஆனால் அந்தப் படத்தில் நடிப்பதற்காக அவருக்கு சொன்ன தேதியிலிருந்து ஒரு நாள் தள்ளி அட்வான்ஸ் தொகையை கொடுத்தாராம் சேரன். இதனால் டென்ஷனான பிரபுதேவா அந்தப் படத்தில் நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். இதனை சேரனே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். அதனைப் பார்த்த ரசிகர்களோ, 'என்ன பிரபு மாஸ்டர் ஒரு நாள் தாமதத்துக்காக ஒரு க்ளாசிக் படத்தை மிஸ் செஞ்சிட்டிங்களே' என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











