மீரா நாயர் படத்தில் பிரபு தேவா

கிரகரி டேவிட் ராபர்ட்ஸ் எழுதிய நாவலின் அடிப்படையில், சாந்தாராம் என்ற படத்தை இயக்கவுள்ளார் மீரா நாயர். இந்தப் படத்தின் நாயகனாக பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் புகழ் ஜானி டெப் நடிக்கவுள்ளார். இப்படத்தை மீராவுடன் இணைந்து தயாரிக்கவும் செய்கிறார்.
இப்படத்தில் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என புகழப்படும் பிரபு தேவா நடிக்கிறார். பிரபு தேவா நடிப்பை விட்டு வெகு நாளாகி விட்டது. தற்போது அவர் இயக்கத்தில் பிசியாக இருக்கிறார். சமீபத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு குறும்படத்தில் மட்டும் நடித்தார். அப்படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியிருந்தார்.
அந்தக் குறும்படத்தில் பிரபு தேவாவின் நடிப்பைப் பார்த்த மீரா நாயருக்கு, பிரபுதேவாவை தனது சாந்தாராம் படத்தில் நடிக்க வைக்கும் ஆர்வம் வந்துள்ளது. இதையடுத்து அவரை அணுகி சம்மதத்தையும் வாங்கி விட்டார்.
ஜானி டெப்புடன் இணைந்து முக்கிய கேரக்டரில் பிரபு தேவா தற்போது நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார். படத்தில் இர்பான் கான், கொங்கனா சென் ஆகியோரும் இடம் பெறுகின்றனர். விஷால் பரத்வாஜ் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











