அட வேற லெவல் ஆட்டமா இருக்கே ப்பா.. மகனுடன் செம ஆட்டம் போட்ட பிரபுதேவா

சென்னை: பிரபுதேவா இந்திய அளவில் ஃபேமஸான நடன அமைப்பாளர், நடிகர், இயக்குநர் என்று பல முகங்களை கொண்டிருக்கிறார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அவர் புகழப்படுகிறார். அவர் புகழின் உச்சியில் இருந்தாலும் அவரை சுற்றி நிறைய சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன. முக்கியமாக நடிகை நயன்தாராவுடன் அவர் இணைத்து பேசப்பட்டார். அந்தக் காதல் முறிவுக்கு பிறகு இன்னொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படுபவர் பிரபுதேவா. இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் ஏராளமான நடன அமைப்பாளர்கள் பிரபுதேவா மற்றும் அவரது அண்ணன் ராஜுசுந்தரம் க்ரூப்பில் ஆடியவர்கள்தான். தற்போதைய நடன அமைப்பாளர்கள் பிரபுதேவாவை தங்களது குருவாக இன்னமும் பார்த்துவருகிறார்கள். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சென்று அவர் ஃபெர்பார்மன்ஸ் செய்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார். குறிப்பாக மைக்கேல் ஜாக்சனின் நிகழ்ச்சி ஒன்றிலேயே தனது க்ரூப்புடன் நடனம் ஆடியவர் பிரபுதேவா.

Prabhu deva Tamil Cinema Kollywood

நடிகர்: முதலில் தனது தந்தை சுந்தரத்தின் நடன க்ரூப்பில் டான்ஸராக இருந்த அவர்; அவ்வப்போது ஒரு பாடலுக்கு மட்டும் திரையில் தோன்றி நடனம் ஆட ஆரம்பித்தார். அதன் பிறகு நடிகராகவும் தமிழ் சினிமாவில் கோலோச்சினார். எதார்த்தமான நடிப்பு அவரது பலங்களில் ஒன்று. அவர் நடித்த காதலன், மின்சார கனவு, மிஸ்டர் ரோமியோ, டைம், பெண்ணின் மனதை தொட்டு என பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அவரது நடிப்புக்கென்று இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

இயக்குநர் அவதாரம்: நடன அமைப்பாளர், நடிகர் என்பதை தாண்டி பிரபுதேவா நல்ல இயக்குநரும்கூட. தெலுங்கில் Nuvvostanante Nenoddantana என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தின் ஹிட்டுக்கு பிறகு தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி உள்ளிட்ட படங்களை இயக்கினார். ஹிந்தியிலும் வாண்டட், ரவுடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, தபாங் 3 உள்ளிட்ட படங்களை இயக்கினார். எனவே இந்தியா முழுவதும் தெரிந்த இயக்குநராகவும் அவர் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக ஜாலியோ ஜிம்கானா, GOAT ஆகிய படங்களில் நடித்தார்.

சர்ச்சைகள்: ஒருபக்கம் அவர் புகழின் உச்சியில் இருந்தாலும் மறுபக்கம் சர்ச்சைகளையும் சந்தித்தவர் பிரபு. முதலில் ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். 2 மகன்களில் ஒருவர் இறந்துவிட்டார். சூழல் இப்படி இருக்க ரமலத்தை பிரிந்த பிரபுதேவா நடிகை நயன்தாராவுடன் லிவிங்கில் இருந்தார். ஆனால் அந்த ரிலேஷன்ஷிப்பும் பாதியில் முடிந்தது. பிறகு மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு ஒரு மகள் அண்மையில்தான் பிறந்தார்.

மகனுடன் ஆட்டம்: இந்நிலையில் முதன்முதலாக சென்னையில் பிரபுதேவா கான்செர்ட் ஒன்றை நடத்தினார். அதில் அவர் அட்டகாசமாக நடனம் ஆடினார். தனுஷ், வடிவேலு, மீனா, ரோஜா உள்ளிட்டோரெல்லாம் அதில் கலந்துகொண்டார்கள். முக்கியமாக தனது முதல் மனைவிக்கு பிறந்த மகனை இந்த மேடையில் அறிமுகப்படுத்திய பிரபுதேவா அவருடன் அட்டகாசமாக நடனம் ஆடினார். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X