ஸ்ரீதேவி வீட்டில் தீப்பிடித்ததால்.. தங்க வீடு இல்லாமல் தவிக்கும் பிரபுதேவா

By Sudha

மும்பை: நடிகை ஸ்ரீதேவியின் வீடு தீவிபத்தில் சிக்கி சேதமாகிப் போனதால் தற்போது நடிகர் -இயக்குநர் பிரபுதேவாவுக்கு சிக்கலாகி விட்டது. அவர் இதுவரை ஸ்ரீதேவிக்குச் சொந்தமான ஒரு அபார்ட்மென்ட்டில்தான் வாடகைக்கு தங்கியிருந்தார். ஆனால் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதால் அந்த வீட்டை பிரபுதேவா காலி செய்து ஸ்ரீதேவியிடமே கொடுத்து விட்டாராம்.

தற்போது அவருக்குத் தங்க வீடு இல்லாததால் சென்னைக்கும், மைசூருக்குமாக போய்க் கொண்டிருக்கிறாராம் பிரபுதேவா. அங்குள்ள தனது வீடுகளில் தங்கி, மும்பைக்குப் பறந்து வருகிறாராம்.

ஆனால் இப்படியே இருக்க முடியாது என்பதால் மும்பையில் வேறு வீடும் தேடி வருகிறாராம்.

ஸ்ரீதேவியின் பங்களாவில் தீ

ஸ்ரீதேவியின் பங்களாவில் தீ

நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான பங்களாவில் டிசம்பர் 21ம் தேதி திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால் ஸ்ரீதேவி குடும்பத்தினர் தவித்துப் போய் விட்டனர்.

மாறி மாறி தங்கிய அவலம்

மாறி மாறி தங்கிய அவலம்

என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்ரீதேவி தனது குடும்பத்தினருடன் பல்வேறு இடங்களில் மாறி மாறி தங்கி வந்தா்.

பிரபுதேவாவைக் காலி செய்யச் சொல்ல சங்கடம்

பிரபுதேவாவைக் காலி செய்யச் சொல்ல சங்கடம்

அந்தேரியில் ஸ்ரீதேவிக்குச் சொந்தமான ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு இருக்கிறது. ஆனால் அதை பிரபுதேவாவுக்கு வாடகைக்கு விட்டிருந்தார் ஸ்ரீதேவி. ஆனால் திடீரென பிரபுதேவாவைக் காலி செய்யச் சொல்ல சங்கடப்பட்டுள்ளார் ஸ்ரீதேவி.

தானே முன்வந்து காலி செய்த பிரபுதேவா

தானே முன்வந்து காலி செய்த பிரபுதேவா

ஆனால் ஸ்ரீதேவி குடும்பத்தினரின் நிலையை அறிந்து தவித்துப் போய் விட்டாராம் பிரபுதேவா. உடனடியாக ஸ்ரீதேவியைத் தொடர்பு கொண்ட அவர் நான் உடனே உங்களது பிளாட்டைக் காலி செய்கிறேன். உடனே நீங்கள் இங்கு வந்து தங்குங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.

நன்றி சொல்லி அந்தேரிக்கு வந்த ஸ்ரீதேவி

நன்றி சொல்லி அந்தேரிக்கு வந்த ஸ்ரீதேவி

இதையடுத்து பிரபுதேவாவுக்கு நன்றி சொன்னார் ஸ்ரீதேவி. சொன்னபடி உடனடியாக தனது வீட்டைக் காலி செய்தார் பிரபுதேவா. இதையடுத்து ஸ்ரீதேவி தனது கணவர் போணி மற்றும் இரு மகள்களுடன் அந்த அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு இடம் பெயர்ந்துள்ளார்.

சென்னைக்கும், மைசூருக்கும் ஷன்டிங்

சென்னைக்கும், மைசூருக்கும் ஷன்டிங்

மும்பையில் தங்க வீடு இல்லாததாலும், ஹோட்டலில் தங்க விருப்பப்படாத காரணத்தாலும் மும்பையில் வேலை முடிந்ததும் பிளைட்டைப் பிடித்து சென்னைக்கோ அல்லது மைசூருக்குப் போய் விடுகிறாராம் பிரபுதேவா. அங்குள்ள தனது வீடுகளில் தங்கிக் கொள்கிறாராம்.

ஜூஹு பக்கம் வீடு பாருங்கப்பா

ஜூஹு பக்கம் வீடு பாருங்கப்பா

தனது மும்பை நண்பர்களிடம் சொல்லி ஜூஹு அல்லது அந்தேரி பக்கமாக நல்ல வீடு இருந்தால் பார்க்கச் சொல்லியுள்ளாராம் பிரபுதேவா. வீடு பார்க்கும் படலம் ஜரூரமாக நடக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X